அறிஞர் அண்ணா
துரைக்குத் திருப்தியாக இருக்கும் என்று கருதுகிறேன்" என்று பதில் சொன்னார்.
"அய்ந்தாண்டுத் திட்டத்தில் தென்னாட்டுக்கே ஒதுக்க வேண்டிய திட்டங்களை மொத்தமாக ஒதுக்கி விடுங்கள். அதன் பிறகு தென்னாட்டிலுள்ள நாங்களே எந்த மாநிலத்துக்கு என்னென்ன திட்டங்கள் என்பதைப் பிரித்துப் கொள்ளுகிறோம் என்று டெல்லியில் வாதாடினேன்" என்று அவர் சொன்னார்.
தேன் சொட்டப் பேசியவர் தெருக்கோடியில் மாறினார்!
மற்றொருமுறை, நிதியமைச்சர் அவர்கள், கிண்டியில் ஏற்படுத்தப்படவிருக்கும் உயர் தரப் பொறியியல் கல்வி நிலையம் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில் இந்தக் கல்வி நிலையம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, திராவிடத்துக்கும் உதவும் என்று கூறி 'இப்படிச் சொல்வது தான் அண்ணாதுரைக்கு திருப்தி ஏற்படலாம் என்று நினைக்கிறேன்!' என்றார்.
இப்படி சட்டசபைக்குள் என் நாக்கில் தேனைத் தடவி விட்டு, தெருக்கோடியில் பேசுகையில் 'ஏது திராவிடம்' என்றால், என்ன பொருள்?
தேவையான மாறுதல் எவ்வாறு இருப்பது?
நாம் சொல்லும் திராவிடம் வரலாற்றிலே இருக்கிறது; கல்வெட்டிலே இருக்கிறது; சிலர் மாறிவிட்டார்களே என்றால், அதற்காக நாம் பொறுப்பாளிகள் அல்லர்.
சாத்துக்குடியின் தோல் பச்சையாக இருந்தாலும் உள்ளே இருக்கும் சுளை இனிக்கும்; வில்வப் பழத்தின் மேல்புறம் செக்கச் செவேலென்று இருந்தாலும் உள்ளே இருப்பதைத் தின்னமுடியாது. இதை நான் சொல்லுவதால் யாரையும் கேவலப்படுத்துவதாகக் கருத வேண்டாம்.
மாறுதல் தேவைதான் என்றாலும், அந்த மாறுதல் நல்ல மாறுதலாக இருக்கவேண்டும். பால் மோராக மாறுவது நல்ல மாறுதல்; மோர் காடியாக
17