உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணா

நோய் ஏற்படுவதுண்டு. அதைப்போல, நம் சம்பத்துக்கே அந்தச் சந்தேகம் வந்திருக்கிறது.

பிரதமர் 'பூசாரி' யானாரே!

சந்தேகப் பேயை ஓட்டுவதற்கு ஒரு நல்ல பூசாரியாக சம்பத்தை அமர்த்தியது தி. மு. க.

பேய் பிடித்தவர்கள் பல ரகம்; ஒவ்வொரு பேயையும் ஒட்டும்போது அந்தப் பேய் தான் யார் என்றும், தனக்குத் தேவை இன்னதென்றும் சொல்லும். அதைப் பேய் சொல்லுவதில்லை — சொல்ல வைப்பவன் பூசாரி!

அதைப்போல, நம்முடைய பிரதமப் 'பூசாரி' யான சம்பத் சந்தேகப்பட்டவர்களை யெல்லாம் ஆட்டிவைத்தார். 'காமராசரே!, உமக்குச் சந்தேகமா? உமக்குப் பூகோளம் தெரியாததால் இந்தச் சந்தேகம் வந்தது; பூகோளம் வாங்கித் தருகிறேன் — படித்துப்பாரும்' என்று சம்பத் சொன்னார். இப்படிப் பலபேருடைய சந்தேகப் பேயை விரட்டினார். ஆனால், அவருக்கே அந்தச் சந்தேகப் பேய் பிடித்திருக்கிறது.

எனவே, சந்தேகம் ஏற்படுபவர்கள், தங்கள் சந்தேகத்தை என்னிடம் தனியாக எடுத்துரைத்தாலும் அதற்கு விளக்கம் தரக் காத்திருக்கிறேன். இப்படிப்பட்ட கூட்டத்தில் கேள்வியாகவும் கேட்கலாம். எந்த வழியிலேனும் உங்கள் சந்தேகத்தைத் தெளியவைத்துக் கொள்ள வேண்டும்.

தேசீயம் என்பதற்கு இலக்கணம் எது?

'தேசீயம், தேசீயம்' என்று இப்பொழுது பழக்கப் படுத்துவதால் அதைப்பற்றிச் சிறிது விளக்க விரும்புகிறேன்.

'அழகு, அழகு' என்கிறோமே எது உண்மையான அழகு? 'இதுதான் அழகு' என்று இதுவரை இலக்கணம் வரையறுக்கப்படவில்லை.

'வீரம் என்றால் இதுதான் வீரம்' என்று உறுதியிட்டு உறுதிப்படுத்தி இலக்கணம் சொல்ல முடியாது.

7