பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வான் சிறப்பு 105 கடந்து வருகிறது. வான் ஒழுக்கு நீர் ஒழுக்குக்கும், நீர் ஒழுக்கு உலக உயிர்களின் ஒழுக்கங்களுக்கும் காரணமாயுள்ளமை காண வந்தது. சீவ ஆதாரங்கள் தெளிவாய்த் தெரிய நேர்ந்தன. நீராவியால் புகைவண்டி ஒடுகிறது; ஆயினும் அதனை நெறியே ஒட்டு கற்கு ஒரு சாதி வேண்டும்; அதுபோல் உலகம் இயங்குதற்கு நீரும் வானும் சேர்ந்துள்ளன. அந்த நிலைமைகள் தலைமையான நீர்மையில் ஈண்டு ஒர்க்து கொள்ள வந்தன. நீர் என்னும் சொல்லுக்கு Զոհաաաաւ, புனிதம் செப் வது என்பது பொருள். உதகம், சலிலம், புவனம், சீவனம், வேனியம், புனல், கோயம் என நீருக்குப் பல பெயர்கள் நேர்ந்துள்ளன. யாவும் நேரே காரணக் குறிகள் அமைந்தன. உதகம் = இகமா உதவுவது. சலிலம் = ஒழுகி ஓடுவது. புவனம் = புவியில் விளைவுகளை உளவாக்குவது. சீவனம் = உயிர்களை வாழச் செய்வது. சீவனியம்= சீவித்தற்கு ஏதுவா யிருப்பது. இன்னவாறே காரணங்கள் கோய்ந்து உலக வாழ்வுக்கு உயிராதாரமாயிருப்பதை நீரின் பேர்கள் நேரே விளக்கியுள்ளன. உயிர்கள் இனிது வாழ உதவியாயுள்ளமையால் காவியக் கவிகள் யாவரும் நீரைச் சீவிய நீர்மையாப் பாடியிருக்கின்றனர். மழை நீரின் பாட்டுகள் விழுமிய நிலைகளில் சில அயலே வருகின்றன. தாதுகு சோலே தோறும், சண்பகக் காடு தோறும், போதவிழ் பொய்கை தோறும், புதுமணல் தடங்கள் தோஅறம், மாதவி வேலிப் பூக வனம்தொஅலும், வயல்கள் தோறும், ஒதிய உடம்பு தோறும், உயிர் என உலாயது அன்றே. (இராமாயணம்) மழையால் விளைந்த நீர் இவ்வுலகில் பரந்து பாய்ந்து உலாவி ஒடியிருக்கும் நிலைகளை இது உணர்த்தியுள்ளது. உடம்புதோறும் உயிர் என நீர் உலகில் இடங்கள் தோறும் உலாயது என்னும் இதன் அழகை விழியூன்றி நோக்கி மழையை உணர்ந்து கொள்க. உயிர் புகுந்தபோது உடல் ஒளிபெற்று உலாவுகிறது; 芯六 புகுந்தபொழுது உலகம் கலமாய் இயங்கி வருகிறது. இந்த J4