பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறட் குமரேச வெண்பா முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. அஃதாவது கடவுளேக் கருதித் துதித்தல். கடவுள் என்னும் சொல் கடந்து நிற்பது என்னும் பொருளது. எல்லாத் தத்து வங்களையும் கடந்து நம்மனோது உரை உணர்வு எவற்றிற்கும் எட்டாதபடி உயர்ந்து கிற்கும் பரம்பொருளை இஃது உணர்த்தி யுள்ளது. எங்கும் கிறைந்து எல்லாம் அறிந்து என்றும் உள்ள கனிமுதல் தலைவனே மனம் மொழி மெய்களால் நினைந்து வாழ்த்தி வணங்கி வாழ்வது மனித மரபின் இனிய கடமையாம். (மனிதன் எதனை எண்ணி எதனேடு பழகி வருகிருனே அந்த நிலையையே அடைய நேர்கின்ருன். உண்மை ஒளியாய் உணர்வு மயமாய் இன்ப நிலையமாப் இனிது நிலைத்துள்ள பரமன் பால் அன்பு புரிந்துவரின் அது ஆனக்க கிலைகளை அருளி வருகிறது. அந்த அதிசய இன்பங்களை மாந்தர் அடைய வேண்டும் என்று கருதித் தேவர் ஈண்டு இவ்வாழ்க்கை இவ்வாறு இசைத்தருளினர். 1. பூவுலகோ டெங்குமேன் பூண்ட துமைகேள்வன் கோமுகிழ்த்த தன்மை குமரேசா-மேவும் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. (க) இதன் பொருள் குமரேசா உமா மகேசன் திருக்கண் முகிழ்த்த கிலே உலகம் எல்லாம் என் பரவி கின்றது? எனின், எழுத்து எல்லாம் அகரம் முதல; அதுபோல் உலகு ஆதி பகவன் முதற் று என்க. கடவுள் உண்மையை ஒர் உவமையால் இது உணர்த்து கின்றது. பொருளை எளிதே தெளிவு செய்ய இவ்வழி அமைந்தது. எழுத்துக்கள் யாவும் அகரத்தை முதலாக உடையன; அதுபோல உலகம் ஆதிபகவனே முதலாக உடையது என்பதாம்.