பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 திருக்குறட் குமரேச வெண்பா கம்மால் காணப்படுகின்ற இவ் வுலகத்தைக் கொண்டு காணப்படாத கடவுள் உண்மையை நமக்குக் காட்ட வந்த நாய ஞர் காம் அறிந்துள்ள அகரம் ஆகிய எழுத்தின் தன்மையை எடுத்துக்காட்டி நம் அறிவுக்கு எட்டாக இறைவன் இயல்பை யும் உயர்வையும் இவ்வாறு செவ்வையா உணர்த்தி யருளினர். முழுமுதல் பரமனது முதன்மையை விளக்கவங்கமையால் இரண்டு முதல்கள் தொடர்ந்துவந்தன. முன்னது பலவின் பால் படிக் த முடிக்கத; பின்னது ஒன்றன் பால் ஒன்றி கின்றது. முதற்றே என்றதில் ஏகாரம் தேற்றம்: இங்கனம் உறுதியாத் தெளிவுறுத்தியது முகல்வனே உரிமையோடு கருதி உய்ய. முதல் என்பது மூலகாரண கிலேயைப் பூரணமா உணரவந்தது. உலகு உயிர்க்கெல்லாம் கலைவனப் இறைவன் ஒருவன் உளன் என்பதனை நோே கூருமல் அகரத்தை இணைத்துக் கூறி யது, அகன் ககவோடு கழுவி உணரின் எளிது தெளிவாசல் கருதி, உரிய தகுதி நிலையின் பகுதிகள் உறவாப் மருவி வந்தன. ஆதிபகவன் அமைதியை நீதிநூல் வழியாக ஓதி உணர்த்து கின்ருர் ஆகலால் எழுத்தை இணைத்து இருவகை முதன்மையை யும் ஒருமுகமாப் வழுத்தி உவமை அணியில் விளக்கியருளிஞர். கலே உலகம் எழுத்துக்களால் ஆயது; அந்த அக்கரங் களுக்கு அகரம் முதன்மையாய் கின்றது; ஆகவே நிலவுலகிற்கு முதல்வனை தலைவனேடு தகவாப் ஒன்றி நின்று அவனது வியனை மகிமையை இது நயமா நன்கு உணர்த்தியருளியது. எழுத்து உலகுக்கும், அகரம் ஆதிபகவனுக்கும் நேராப் கின்று நீர்மை சீர்மைகளைத் துலக்கின. எழுத்தை அறிந்து, இறைவனை உணர்ந்து அறநெறி கழுவி விழுமிய நிலையில் வாழ்வ கே. பிறவிப் பேரும் என்பது இதல்ை இனிது தெரிய வந்தது. எழுத்து உயிரும் ஒற்றும் என இருவகையாய் மருவியுளது; உலகம் உயிருடைப்பொருளும் உயிரில் பொருளும் என இரு பிரி வுடையது. அகரம் எல்லா எழுத்துக்களையும் கலந்து இயக்கித் தானும் தனித்து இயங்கும்; ஆதி பகவனும் எல்லாப் பொருள் களையும் இனமாக் கலந்து இயக்கித் தானும் தனித்து இயங்குவன்.