பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 திருக்குறட் குமரேச வெண்பா பூண்டார் என்றது அரிய விலையுடைய பெரிய மணி அணி யாகத் துறவை மருவி நிற்கும் மகான்களுடைய அருமையும் பெருமையும் அழகும் அமைதியும் கூர்க்க அறிய வந்தது. உள்ளத்தில் பற்றுக்களை ஒழிக்க துறவிகள் உலகத்தில் உயர் மகிமையாளராய் ஒளி மிகுந்து விளங்குவா ர்; யாவரும் அவரை ஆவலோடு புகழ்ந்து போற்றுவார் என்பது இதில் உணர்த்தப் பட்டது. இவ்வுண்மை பட்டினத்தார்பால் உணரப்படும். ச ரி த ம். பட்டினத்தார் என்பவர் காவிரிப்பூம் பட்டினத்தில் இருக் தவர். வணிகர் குலகிலகர்; பெற்ருேர் இவருக்கு இட்ட பெயர் திருவெண்காடர் என்பகே. செல்வ நிலையில் சிறந்து நகரில் கனிக் தலைமை பெற்றிருக்கமையால் பட்டினத்தார் என நேர்ந்தார். பெரிய கப்பல் வியாபாரி. பல மரக்கலங்கள் இவருக்கு உரிமை யாயிருக்கன. அவை அயல் நாடுகளுக்கும் சென்று வந்தன. வணிக முறையில் இவருடைய பேர் உலகம் எங்கும் பரவியிருக் தது. அரசரும் விரும்பும் பெரும் பொருள்கள் இவரிடம் நிறைக் திருந்தன. அரிய பல கருமங்களைச் செய்து பெரிய புகழோடு இவர்மகிழ்ந்து வாழ்ந்தார்.அவ்வாறு வருங்கால் ஒருபெரியவரைக் கண்டார். அவரை உவந்து உபசரித்தார்; இவரது மன நிலையை பும் பரிபக்குவத்தையும் அறிந்து ஒரு ஒலைச் ட்ேடைத் தனியே விட்டில் வைத்து விட்டுப் போனுர். மாலேயில் வந்து அ க శీవా இவர் பார்க்கார். காது அற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே என்று அதில் எழுதியிருக்கது. அதன் பொருளையும் இறைவன் அருளையும் ஒருங்கே கினைந்த உள்ளம் உருகினர். கித்திய அகித்திய விவேகம் நேரே ஒளி வீசி நின்றது. எல்லாச் செல்வங்களையும் அறவே துறந்து விரைந்து இவர் வெளியே போனர். இவரது திறவு நிலையை அறிந்து பெரிய அரசர்களும், அரிய முனிவர்களும் அதிசய மடைந்து துதிசெய்து புகழ்ந்தார். பார்.அனேத்தும் பொய்எனவே பட்டினத்துப்பிள்ளையைப்போல் யாரும் துறக்கை அரிது அரிது. (தாயுமானவர்) பட்டினத்துப் பிள்ளையினைப் பத்திரகிரி யைப்பரவி விட்டுவிட மாட்டார் வெறுவிடர். (ஒழிவிலொடுக்கம்)