பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 130 திருக்குறட் குமரேச வெண்பா ஐம்புலனை வென்ருன் அகிலமும் வென்றவய்ை இன்பநிலை காண்பன் எதிர். பொறியை நெறியே காத்துப் புனிகன் ஆகுக. 35. மாதவத்துக் கோகமன்தன் வாப்மொழியின் வன்மைனவர் கோதகலக் கண்டார் குமரேசா-பூதலத்தில் ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. (டு) இ-ள். குமரேசா ! அரிய கவமுடைய கெளதமா து வலிமையைத் தெளிவாக அறிந்தவர் யார்? எனின், ஐந்து அவிக்கான் ஆற்றல் அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி என்க. ஐந்து என்றது. மெய் வாப் முதலிய ஐம்பொறிகளின் வழியே நுகர்கின்ற கசைகளே. அவித்தல் ஆவது அக்க ஆசை களை அறவே அடக்குதல். ஐந்தும் காக்க வேண்டும் என்பதை முன்னம் கண்டோம்; அவற்றை முழுதும் அடக்க வேண்டும் என்பதை இதில் தெளிவாய்க் காணுகின்ருேம். காத்தலுக்கும் அவித்தலுக்கும் வேறுபாடு உண்டு. அல்லலான புலைகளில் செல்லாமல் புலன்களை நல்ல நிலையில் நிறுத்துவது காப்பதாம்; மயலான வழி க ளி ல் பழகிவக்க அவற்றை யாதொரு செயலும் இல்லாகபடி செய்து விடுவது அவிப்பதாம். அவித்தல்= அடக்கல், கணித்தல், முன்னது ہوا ثابا மாட்டைக் கட்டிக் காப்பது போல் கண் விழிப்புடையது; பின்னது கட்டாமலே கண் அயர்ந்து கிடக் கும்படி விட்டு விடுவது. பொறிகளைக் காப்பதும் அவிப்பதும் அதிசய மகிமைகளை அருளுதலால் அவை இங்கே துதி செய்ய வந்தன. புலையாய புலன் அவிய கிலேயாய சலன் விளையும். பொறிவாயில் ஐந்து அவித்தான் (குறள், 6) என்று கடவுளேயே இவ்வாறு குறித்திருக்கலால் ஐந்து அவித் தானது அம்புத நிலையை ஈண்டு சன்கு அறிந்து கொள்ளலாம்.