பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 திருக்குறட் குமரேச வெண்பா 85. வெற்றி மிகுதக்கன் வேள்வியறம் செய்துமேன் குற்றமிக வுற்ருன் குமரேசா-உற்ற அழுக்கா ஹவாவெகுளி இன்ச்ைசொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம். (டு) இ-ள். குமரேசா கக்கன் வேள்வி ஆகிய அறக்கைச் செப்தம் என் குற்றம் மிக உற்ருன்? எனின், அழுக்காறு அவர வெகுளி இன்னச் சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் என்க. அறக்கை அடிகள் உணர்த்திவரும் திறக்கை நுனித்து உணர்ந்து வருகிருேம். மனத்தில் மாசு இல்லாதிருத்தலே அறம் என்று முன்னம் உரைத்தார்; அந்த மாசுகள் எவை? அவை எவ்வாறு இருக்கும்? என எவரும் அறிய விரும்புவர் ஆதலால் அவற்றுள் நான்கு பிழைகளை ஈங்கு விழி கெரிய விளக்கினர். அழுக்காறு=பொருமை. பிறருடைய உயர் கலங்களைக் கண்டு உள்ளம் பொருமல் துயர் உற்று அழுங்குகல் அழுக்காறு என நேர்ந்தது. அழுக்கு ஆறு ஆக ஓடிவருவது என்று மொழி வழக்காட இது முடிந்துள்ளது. உள்ளக்கை மாசுபடுத்தி மனி கன இழிவாக்கி ஈனமாத் தள்ளுவது ஆகலால் இது கொடிய சேமாக் கடிய நின்றது. இக்க அழுக்கு ஒழியின் அறம் விளையும். அவா= விளுன பேராசை, வெகுளி= விவேகமின்றி வெகுண்டு சிறுவது. இன்னுச்சொல்=பிறர் துன்புறத் தடுக்காப் பேசுவது. முன்னே குறித்த மூ ன் அறும் மனத்தைப் பாழாக்கும்; இன்னச் சொல் சாவை காசப்படுத்தி கவையை விளக்கும். பழி தயாங்களான இக்க இழிவுகள் யாதும் நுழையாகபடி கன் மனக்கையும் வாக்கையும் எவன் எவ்வழியும் இனிது பாது காத்து வருகிருனே அவனே உயர்ந்த தருமவான் ஆகின்றன். ஈன இழுக்குகள் யாதும் இல்லாமல் இகமா இயைந்திருப் பகே உயர்வான புண்ணியம் என்பார் இழுக்கா இயன்றது அறம் என்ருர், இழுக்குதல்=பிழைபடுதல் இழுக்காது இயலுதல்= பிழைநீங்கிஉயர்தல். விழுமிய புண்ணியகில விழி தெரிய வந்தது. H