பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அறன் வலியுறுத்தல் 187 வெளியே வருவதற்கு இடமாய்ப் புழை அமைக்த நிற்பது வழி என வந்தது. பிறந்தும் இறக்தம் ஓயாமல் தொடர்ந்து வருகிற தொல்லை நிலை அறத்தால் அறவே அறுந்து போம் என்பதாம். வழியை அடைப்பது கதவு, அது மரக்கால் செய்யப்படுவது. அதைவிட மிகவும் வலியுடையது என்பார் அஃது கல் என்ருர். அறத்தை ஆற்றுவது பிறப்பை அறவே மாம்.அறுவதாம். எந்த வகையிலும் பிறவி துயரம் மிக வுடையது; எவ்வழி யும் தொடர்ந்து அடர்ந்து படர்வ.து ஆதலால் அந்த வாழ்நாள் வழியை அடைப்பது அக்கமில் இன்பம் அடைந்தபடி யாம். கோளு மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி வினத்தண்டு ஊடே வெளியுறத் தான் நோக்கிக் காணுக்கண் கேளாச்செவி என்று இருப்பார்க்கு வாணுள் அடைக்கும் வழியது வாமே. (திருமந்திரம்) வாழ்நாள் அடைக்கும் வழியைத் திருமூலர் இவ்வாறு யோக தருமத்தில் விவேகமா விளக்கிக் காட்டி யிருக்கிரு.ர். விளுள் படாமை துன்னம்பெய் வேயாக வாணுள் படுவ தறி. (அறநெறிச்சாரம்) நாளும் அறம் செய்; வாழ்நாள் அற்று விடும் என இது குறித்துளது. பொழுது பழுகாகாமல் புண்ணியம் கழுவுக. தருமம் கருமம் யோகம் ஞானம் துறவு தவம் முதலிய யா வும் பிறவி நீக்கம் கருதியே பெருகி வந்துள்ளன. புண்ணியம் பெருகிப் பரிபாகம் தோன்றிய அளவுதான் புனித நிலையை மனிதன் அடைகின்ருன். நல்லது புரிபவன் அல்லல் அறுகிருன். இயன்றவரையும் நாளும் அறம் புரிந்து வருபவன் பிறவி நிலையைக் கடந்து உயர்க்க கதியை அடைந்து கொள்ளுகிருன். இந்த வுண்மையை நந்தனர். நன்கு உணர்த்தியருளினர். ச ரி த ம். இவர் சோழ மண்டலத்திலே மேற்கா நாட்டிலே ஆதனுர் என்னும் ஊரிலே பறையர் குலத்திலே பிறந்தவர். சிறந்த பல பண்புகள் இவரிடம் இயல்பாகவே நிறைந்திருந்தன. எவ்வழி யும் தரும சிந்தனையோடு கருமங்களை இவர் செய்து வந்தார்.