பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. இல் வாழ்க்கை 213 ஊண் உடைத்தாயின் வாழ்க்கை வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் என்க. வமிசம் தழைத்து வரும் வகை தெரிய வந்தது தலைமையான இல்வாழ்வின் கிலேமையை முன்னம் கூறினர்; அது என்றும் நிலைத்து வரும் வழியை இதில் உணர்த்துகின்ருர், உயர்ந்தோரால் பழிக்கப் படுவது பழி என வந்தது. இழி வான பிழைகளைச் செய்ய நேரின் அது பழியாம். பழி அஞ்சுக லாவது இழிவுகளைச் செய்யக் கூசுதல் பழி அஞ்சி என்பது பழியை அஞ்சி, பழியின் அஞ்சி, பழிக்கு அஞ்சி என இவ் வாறு உருபுகளை விரித்துப் பொருள் காண அமைந்துள்ளது. அச்சக் கிளவிக்கு ஐந்தும் இரண்டும் எச்சம் இலவே பொருள்வயி னை. (தொல்காப்பியம்) இந்த இயல் விதி இங்கே சிந்திக்கத் தக்கது. பாத்து ஊண் என்றது பகுத்து உண்னும் உணவை. வழி=மரபு. தொடர்பாப் மருவி வருதலால் இஃது இப் பெயர் பெற்றது. எஞ்சல் = குறைதல். குடிவாழ்வு தேய்ந்து அழியாமைக்கு வாய்ந்த வழி ஈங்கு விழி காண வந்தது. பழிக்கு அஞ்சிப் பகுத்து உண்டலே ஒருவன் வாழ்க்கை உடையதாயின் அது என்றும் குன்ருமல் வழிமுறையே நிலைத்து விழுமிய புகழோடு நன்கு விளங்கி வரும் என்பதாம். எவ்வழியும் பாதும் பழிபடியாமல் தன்னைப் பாதுகாத்துத் தன்பால் வந்தவர் எ வரும் உண்டு மகிழும்படி உணவுகளை அன் போடு ஊட்டி ஒருவன் ஒழுகி வருவான் ஆயின் அவன் குடி விழுமிய நிலையில் விளங்கி வழிமுறையே சங்கதி விருத்திகள் பெருகி ஒளி மிகுந்து உலகம் உவக்க புகழ்ந்து வர யாண்டும் உயர்ந்து சிறந்து வரும் என்பது இங்கே விழி தெரியவந்தது. பழி ஒழிக்கதால் புகழ் வளர்த்து வருகிறது; பகுத்து உண்ப கால் புண்ணியம் பொங்கி விளைகிறது; ஆகவே அந்த வழி எந்த வகையிலும் சிறந்து என்றும் கிரக்கரமாப் விளங்கி வரநேர்ந்தது. பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல்அரிது (குறள், 227) எனப் பின்னரும் இன்னவாறு கூறியுள்ளமை ஈண்டு உன்னி யுணரவுரியது. தனக்குக் கிடைத்த உணவைப்