பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. இல் வாழ்க்க்ை 215 இயற்கையாய் இசைக்திருந்தன. உள்ளம் உவந்து எவ்வழியும் இனியராப் உதவி வங்கமையால் வள்ளல் என்றே யாவரும் இவரைப் புகழ்ந்த போற்றி வந்தனர். இவருடைய குணகலங் களையும் உபகார நிலைகளையும் கம்பர் பெருமான் அன்பு மீதுளர்ந்து பாடியிருக்கிருர் பாட்டுகள் யாவும் இவரது விருந்து ஒம்பலின் பெருந்தகைமைகளைக் காட்டிப் பெரும் புகழைவிளக்கியுள்ளன. மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றென்று வீட்டளவும் பால்சொரியும் வெண்னெயே--காட்டில் அடையா நெடுங்கதவும் அஞ்சல் என்ற சொல்லும் உடையான சடையப்பன ஊர். (கம்பர்) இவரது உபகார நிலையை இன்னவாறு நன்னயமா விளக்கி யுள்ளார். இந்தக் கவியின் சுவைகளைக் கருதியுணர்ந்து கொள்ள வேண்டும். எல்லாருக்கும் இகம் புரிந்து வந்துள்ள இவருடைய தலைமுறையும் வழிமுறையும் குலமுறையும் உலகம் அறிய ஒளி பெற்றுப் பலரும் வியந்து புகழ்ந்து வர விரிந்து கின்றுள்ளன. அரியனே அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்தப் பரதன் வெண் குடைகவிக்க இருவரும் கவரி வீச. விரைசெறி குழலி ஒங்க வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனேங்தான் மெளலி. (இராமா, முடிசூட்டு, 38) இராவணனை வென்று வெற்றிக் திருவோடு மீண்டு வந்து அயோத்தியில் இராமன் மணிமகுடம் புனைந்திருக்கும் மாட்சி யை இது காட்சியாக் காட்டியுளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கே இவருடைய மரபினர் அரசு விழைதிருவின ராப் மருவி வக்தள்ளமையை இகளுல் உணர்ந்து கொள்ளுகி ருேம். வெண்ணயூர்ச் சடையன் மரபு விண்ணும் மண்ணும் புகழ விளங்கி கிற்கிறது. பழி அஞ்சிப் பகுத் துண்டு உபகரித்து வருப வனது வழிமுறை எஞ்ஞான்றும் விழுமிய நிலையில் உயர்ந்து விளங்கிவரும் என்பதை உலகம் இவர்பால் உணர்ந்து கின்றது. உண்ணும் உணவை உயிர்கட் குதவிவரின் விண்ணும் வியந்து விழைங்தவனே-எண்ணும் தவமுடையான் என்று கழுவி மகிழ்ந்து நவமுடைமை செய்யும் கயங் து. ஆர்ந்த பறவைகட்கு ஆல்போல இல்வாழ்வான் நேர்ந்தவர்க் கெல்லாம் நிலை. பிறர்க்கு ஊட்டிப் பிறகு உண்ணுக.