பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 திருக்குறட் குமரேச வெண்பா 45. மண்டுபுகழ் மாறனர் மாருத அன்பறனேன் கொண்டிருந்தார் இல்லில் குமரேசா-தண்டாத அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது (டு) இ-ன். குமரேசா இளையான்குடி மாறஞர் எவ்வழியும் அன்பும் அறமும் உடையராப் என் இல்வாழ்க்கார்? எனின், இல்வாழ்க் கை அன்பும் அறனும் உடைத்தாயின் அது பண்பும் பயனும்என்க. மனையிலிருந்து ஒரு மனிதன் வாழும் வாழ்வுக்கு உரிய உயர்ந்த பயனை உலகம் தெரிய இது சயமா உணர்த்துகிறது. அன்பு = உள்ளம் கனிந்து உகவி புரியும் நீர்மை. அறன் = விதிமுறை கழுவி நெறியே ஒழுகும் சீர்மை. இவை இல்வாழ்க்கைக்கு இரண்டு கண்களா யிசைக்துள் ளன. இந்த விழிகள் பழுதுபடாமல் விழுமிய கிலையில் விளங்கி வரின் அக்க வாழ்வு அதிசயநிலையில் ஒளிமிகுந்து உயர்ந்து வரும். உடைத்து ஆயின் என்றது இனிய இவ்வுடைமைகள் ஒருங் கே அமைதல் அருமை என்பது தெரிய வந்தது. செல்வம் முதி லிய உடைமைகள் நிறைந்திருக்காலும் இவை இல்லையேல் அவ் வாழ்வு தாழ்வுடையதாம். வாழ்வின் மேல் வைத்துக் கூறியது வாழ்வான் உய்த்து உணர்ந்து உரிமையோடு உறுதி காண. ஒருவனுடைய இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடைய தாயின் அது பண்பும் பயனும் கிறைந்து விளங்கும் என்பதாம். I அன்பால் வாழ்வு பண்பு உறுகிறது; அறத்தால் அது பயன் பெறுகிறது; பெறவே இருமையும் பெருமையாய் உயர்வடை கின்றது. மணத்தால் மலரும் ஒளியால் மணியும் உயர்வுறுதல் போல் அன்பு அறங்களால் வாழ்வு மனமும் குணமும் மருவி மிளிர்கிறது. உள்ளம் கனித்து நல்லது செய்;கலம் பல விளையும். எவ்வுயிர்க்கும் இரங்கி இகம் புரிந்து கருமவானப் ஒருவன் ஒழுகிவரின் அவனுடைய இல்வாழ்வு நல்ல பண்பாடுடையதாய்ப் புண்ணியம் பொலித்து புகழ் ஓங்கி கிலவும். அவ்வாறு வாழின் அது திவ்விய வாழ்வாம்; ஆகவே அதிசய மகிமைகள் அகனல் உளவாம். இவ்வுண்மை மாறஞர் பால் உணர கின்றது.