பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 திருக்குறட் குமரேச வெண்பா வழியும் கருமநெறி கழுவியது ஆதலால் இல்லறம், துறவறம் என இசை பெற்று கின்றன. அந்த இரண்டனுள் முன்னகே சிறந்தது என்று இங்கே உரிமையா வரைந்து கூறுகின்ருர். அறம் என்று சிறப்பாக் குறிப்பது இல்வாழ்க்கையே; அதுவும் பிறன் பழியாகபடி அமையின் சல்லது என்பதாம். ஏகாரம் உறுதியாய்த் தெளிவு தோன்ற கின்றது. இல் வாழ்க்கை இயல்பாகவே சிறந்தது ஆயினும் அதற்கு உரிய குண நீர்மைகளோடு மணமாக் கூடியிருக்க வேண்டும்; அவை குன்றி கின்ருல் அது குறைபாடு உடையதாம். பிழை படாமல் விழுமிய நிலையில் புனிதமாய் வாழ்வதே புண்ணிய வாழ்வாம். பிரமச்சாரி வாழ்வினும் துறவி வாழ்வினும் இல்வாழ்வான் வாழ்வு பலர்க்கும் நல்வாழ்வு கருதலால் அதவே தலைமையான அறம் என அதன் கிலைமையும் நீர்மையும் நேரே தெரிய வந்தது. இழிவான செயல் இயல்களைக் கண்டபோது உலகம் பழிக் கும்; அவ்வாறு பழிபடாமல் வாழ்வதே வாழ்வாம்: பிறர் மனைவி யரை விழைதல், பிழை மொழிகள் கூறல், வருக்தி வந்தவர்க்கு அருந்த உணவு தராமல் அகலவிடுதல் முதலியன பழிகளாம். விருந்து புறந்தரான் வேளாண்மை செய்யான் பெருந்தக் கவரையும் பேணுன்---பிரிந்துபோய்க் கல்லான் கடுவினே மேற்கொண்டு ஒழுகுமேல் இல் வாழ்க்கை என்பது இருள். (முனைப்பாடியார்) பழிப்புடைய இல்வாழ்க்கையைக் குறித்து முனைப்பாடியார் இப்படி விளக்கியிருக்கிருர் பழிப்பு இல்லாதது எப்படி இருக் கும்? அந்த உத்தம வாழ்வை அயலே காண வருகின்ருேம். பிச்சையும் ஐயமும் இட்டுப் பிறன்தாரம் நிச்சலும் நோக்காது பொய் ஒரீஇ-கிச்சலும் கொல்லாமை காத்துக் கொடுத்துண்டு வாழ்வதே இல்வாழ்க்கை என்னும் இயல்பு. (அறநெறிச்சாரம்) இத்தகைய இனிய இயல்புகளோடு கூடி வாழ்வதே நல்ல இல்வாழ்க்கை பாம். _ இனி அஃதும் என்றது துறவறத்தைச் சுட்டியது என்று கொண்டால் அவ் வாழ்வும் பிறர் பழியாதபடி புனித நிலையில் மருவிய பொழுதுதான் மகிமையுறம் என்று