பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 திருக்குறட் குமரேச வெண்பா சரிதம் 4. அரிமருத்தன் என்னும் பாண்டிய மன்னன் இக்காட்டை ஆண்டு வருங்கால் ஒரு நாள் வைகை நதியில் பெரு வெள்ளம் பொங்கி இருகரைகளையும் உடைத்துச் சென்றது. அரசனது ஏவலால் மதுரை நகரவாசிகள் யாவரும் அக்கரைகளை அடைக் கச் சென்றனர். நாளும் பிட்டு விற்றுச் சீவனம் செய்யும் கிழவி ஒருத்தி அவ்வூரில் இருங்காள். செம்மனச் செல்வி என்னும் பேரினள், அவள் பங்குக்கு ஆள் வரவில்லை; அரச தண்டனை நேருமே என்று அம்முதியவள் மறுகிளுள். அருள் வள்ளலான பரமன் அவளுடைய மறுக்கத்தைத் தீர்க்க விரைந்தார்; ஒரு கூலியாள் போல் வடிவம் கொண்டார்; அவளிடம் வந்தார்; வேலை செய்வதாக வாக்குறுதி கந்தார்; கூலிக்காகக் கொஞ்சம் பிட்டு வாங்கி உண்டார்; பின்பு கரையை அடைக்கச் சென்ருர், துறைகள்தோறும் தொழில்கள் நடப்பதைக் கண்டார். இவரும் மண்ணை வெட்டினர்; கூடையைத் தாக்கிச் சுமந்து தொழில் புரிவகாச் சாடைகள் செய்தாரேயன்றிச் சரியாய் வேலைசெய்ய வில்லை; அரசனது காரிய விசாரணையையும் பரிபாக நிலையையும் ஞாலம் காண வேண்டி அக் கோலங் கொண்டு உலாவினர். கிழவியின் கூவியாள் வேலை செய்யாமல் கால தாமதம் செய் கிருன் எனக் காவலர் ஈர்த்துப்போய் அரசனிடம் காட்டினர்; கண்ட மன்னன் கனன்ருன், கையிலிருந்த பிரம்பால் ஐயன் முதுகில் அடித்தான். அந்த அடி அண்டபகிரண்டங்கள் யாவும் பட்டது. ஆண்டவன் விரைந்து மறைந்து போனன்; போகவே பாண்டியன் பயந்து வியந்து பரமனை கினைந்து உருகினன். உள்ளம் தெளிந்து உரிமை மீதுார்ந்து உழுவலன்புடன் தொழுது வழிபாடுகள் செய்தான். பாமன் ஆடலைப் பார்முழுதும் வியக்கது. வள்ளல்தன் கோபம் கண்ட மாறுகோல் கையர் அஞ்சித் தள்ளருஞ் சினத்த ராகித் தடக்கைதொட் டீர்த்துப் பற்றி உள்ளொடு புறங்கீழ் மேலாய் உயிர்தொறும் ஒளித்துகின்ற கள்ளன இவன்தான் வந்தி ஆள் எனக் காட்டி கின்ருர். (1) கண்டனன் கனன் று வேந்தன் கையில்பொற் பிரம்பு வாங்கி அண்டமும் அளவி லாத உயிர்களும் ஆகம் ஆகக் கொண்டவன் முதுகில் விசிப் புடைத்தனன் கூடையோடு மண்தனே உடைப்பில் கொட்டி மறைந்தனன் கிறைந்த சோதி.