பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 திருக்குறட் குமரேச வெண்பா 58 வானுலகும் போற்றுகின்றமாண்பையேன் கண்ணகிதன் கோனுடனே பெற்ருள் குமரேசா-தானுவந்து பெற்ருற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. )یy( இ-ள். குமரேசா 1 தேவரும் வியக்க போற்றக் கண்ணகி தன் கணவனுடன் விண்ணுலக வாழ்வை என் எய்திள்ை? எனின், பெண்டிர் பெற்ரும் பெறின் பெருஞ்சிறப்புப் புக்கேளிர் வாழும் உலகு பெறுவர் என்க. பதியைப் பேணுபவர் கதி காணவந்தது. பெற்ருன் என்றது கணவனே. தன்னை மனைவியாக உவந்து கொண்டவன் என்னும் உரிமையும் உறவும் தோன்ற கின்றது. பெறின் என்றது தன்னைத் துணைவியாகப் பெற்ற கணவனே எவ்வழியும்செவ்வையாகப் பேணிவரும் பணியின. கொழுநனே தெய்வம் என்று உழுவலன் போடு கருதி உபசரித்து ஒழுகி வரு வது அருமை ஆதலால் பெறின் என்ருர், அரிய அப்பேற்றை உரிமையாகப் பெற்றவள் பெரிய புண்ணிய சாலி ஆகிருள்; ஆகவே தேவலோக வாழ்வை அவள் மேவி மகிழ்கிருள். புக்கேளிர்=தேவர். புண்ணியத்தால் விண்ணுலகில் விளங் குபவர். உற்ற துணையை ஆகளி; உம்பர்உலகம் இன்பம்.அருளும். கற்பால் கன்னைக் காக்கும் மகளிர் அற்புத நிலையினர் என்று முன்னம் குறிக்கார்; இதில், அவர் கணவரைப் பேனும் முறை யையும், அகல்ை காணும் மகிமையையும் இனிதுகாட்டுகின்ருர், பெற்ருர் எனவும் பாடம். பெறுவர் என்னும் பன்மைக்கு அது உரிமையாம். ஒருமையில் உரைப்பது பெருமை யாயது. பெற்ருனை அன்புடன் பேணின் பேரின்பம் காணியாப் வரும். பெற்ருரும் பெற்ரும் பிழையாத பெண்டிரும். (பரிபாடல்) பெற்ருன் அதிர்ப்பின் பினேயன்னுள் தான் அதிர்க்கும். (நான்மணிக்கடிகை) கணவனையும் மனைவியையும் இவ்வாறு இவை குறித்துள்ளன. பெண்டிர் = மனேவியர். பெண்மைப் பயனே யுடையவர். கம் கணவரை இனிது பேணிவரும் மனைவியர் பெரிய