பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மக்கட் பேறு 299 64. உண்டுமக்கள் கையளைந்த ஒண்கூழை ஏன்சுசில கொண்டினிதா உண்டாள் குமரேசா-கண்ட அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். (F) இ-ள். குமரேசா தனது மக்கள் கை அளேக்க உண்டு எஞ்சிய கூழைச் சுசீலை என் இனிமையா உவந்து உண்டாள்? எனின், தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் அமிழ்தினும் ஆற்ற இனிது என்க. கையும் கூழும் நேரே காண வந்தன. அரிய இனிய அமிழ்கையும் எளிய கூழையும் எதிர் கி.ரத்தி மக்களால் விளையும் மகிழ்ச்சி நிலையை இது நன்குவிளக்கியுளது. பிறக்க பிள்ளைகள் பால் பெற்ருேர்கள் பல வகைகளாலும் இன்ப கலங்களே நுகர்ந்து மகிழ்கின்றனர். இளமை எழில்களைக் கண்டும், மழலை மொழிகளைக் கேட்டும், தளர்நடைகளை கோக் கியும், தழுவிச் சுமந்தும், உடனிருக்த உண்டும் இன்னவாறு குழவிகளோடு கிழமையாப்க் கெழுமி உளம்மிக உவந்து வரு வது உலக மாங்கரிடை வளமையாய் வளர்ந்து வருகிறது அந்த வகையில் உண்ணுகின்ற இனிய உணவுகிலை ஈண்டுஉணரவத்தது. தம்முடைய மக்கள் சிறுகை அளைந்த வறிய கூழ் அரிய அமிழ்தினும் பெற்ருேர்க்கு மிகவும் இனிமையாம் என்பதாம். இனிதே என்றதில் ஏகாரம் தெளிவும் உறுதியும் தெரிய கின்றத். அதன் கொணியை உள்ளச் செவியால் துணுகி உணர் பவர் உயிரின். பரிவைத் தனியே உணர்ந்து .ெ கா ன் வ ர். அமிழ்த=தேவர் உணவு; இனிய சுவை கிறைந்தது; அதிசய மகிமை வாய்ந்தது. கூழ்= எளிய உணவு; சீர் ஆகாரமாய் நெகிழ்ந்து தளர்ந்திருப்பது; சுவை குறைந்தது. குழங்தை கை கோப்ந்தால் பழங்கூழும் தெய்வ அம்ே தினும் சுவை மிகுந்து இன்பம் தரும் என்றகளுல் மக்களின் மகிமையும் மானச மருமமும் தக்க வகையா அறிய கின்றன. எச்சிலை எவரும் விரும்பார்; தனியாகவே இனித உண்பர். தன் இளங்குழங்கை வந்து கலந்து உண்டால் உள்ளம் களித்து அருந்துவர். பிள்ளை மீது உள்ள பிரியம் அது தொட்ட கூழும் அமுதமாய்ச் சுவை சுரங்க வர உவகை புரிந்து வருகின்றது.