பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

= 366 திருக்குறட் குமரேச வெண்பா உரிய நண்பரான துரோணருக்கும் என் ஒன்றும் உதவவில்லை? எனின், யாக்கை அகத்து உறுப்பு அன்பு இலவர்க்குப் புறத்த உறுப்பு எல்லாம் எவன் செய்யும்? யாதும் செய்யாது என்க. உறுப்பு = உறவாப் உற்றிருப்பது. புறத்து உறுப்பு என் மது வெளியே உள்ள அங்கங்களை. அவையாவன நெல், புல், பொன், மணி, மாடு, வீடு, காடு, முதலிய பொருள்கள். ப ல வகையாப்ப் பரவியிருக்கும் பன்மை நோக்கி எல்லாம் என்ருர். உயிரின் பண்பாப் உள்ளே உறைந்திருப்பது ஆகலால் அன்பு அகத்து உறுப் பு என வக்தது. அகம் புறம் என்பன ஆன்ம எல்லைகளை நோக்கி வந்தன. அன்பு உயிரின் இனிய மணம். அகக்கே அ ன் பு இல்லாதவர்க்குப் புறக்கே எவ்வளவு செல்வங்கள் நிறைந்திருந்தாலும் அவர் யாதும் உதவார் என்ப தாம். உதவி புரிய உரிய இனிய நீர்மை அன்பேயாம். எவன் செய்யும்? என்னும் வினு யாதொரு பயனையும் செப்யா என்பதைத் தெளிவுறுத்தி கின்றது. பொருளுடைமையையும் அன்பின்மையையும் எதிரே நிறுத்தி கிலைமையை நலமா விளக்கி யருளினர். அன்பும் ஆகரவும் இனமா கேரே அறிய வந்தன. உள்ளத்தில் அன்பு இல்லாதவன் உலகத்தில் வெள்ளம் போல் பெரும் செல்வங்களை வைத்திருந்தாலும் எள் அளவும் யார்க்கும் பயன் படான், ஆகவே அவனுடைய பிறப்பும் இருப் பும் உறுப்பும் உடைமையும் ஒருங்கே பாழாம் என்பதுபெற்ரும், இல்லானுக் கன்பிங் கிடம்பொருள் ஏவல் மற்று எல்லாம இருந்துமவற்கு என்செய்யும்--கல்லாய் ! மொழியிலார்க்கு ஏது முதுஆால் தெரியும் விழியிலார்க்கு எது விளக்கு. (கன்னெறி, 15) அன்பு இல்லானுக்கு இடம் பொருள் எவல் எல்லாம் இருக் தாலும் பாதும் பயன் செப்யா என்பதை உவமானங்களோடு இது நன்கு உணர்த்தியுள்ளது. இக்க அருமைத் திருக்குறளை கினைந்தே சிவப்பிரகாசர் இதனை இவ்வாறு நவமா வனந்திருக் கிருர், வெளியே விண் ஒளி விரிந்து பரந்திருந்தாலும் உள்ளே கண் ஒளி இழந்த குருடனுக்கு அகல்ை ஏதேனும் பயன் உண் டோ? இல்லை. அதுபோல் அகத்தே அன்பு இல்லாதவனுக்குப் புறத்தே பெரும் பொருள்களிருந்தாலும் சிறிதும் பயன்படாக,