பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 திருக்குறட் குமரேச வெண்பா இனிய சுவைகளை யுடையன நல்ல கனிகள் ஆகின்றன: ஆகவே எல்லாரும் அவற்றை உவந்த கொள்ளுகின்றனர்; அது போல் இனிய கீர்மையான அன்புடையவர் பண்பு பல சுரங்து எவ்வழியும் இன்பம் கனிந்து வருகின்றனர்; வரவே யாவரும் அவரை ஆவலோடு புகழ்ந்து மகிழ்ந்து போற்றுகின்றனர். உள்ளத்தில் அன்பு தோய்ந்த போது அந்த மனிசன் உல கத்தில் உயர்ந்த தோன்றுகிருன். மேலோர், .ெ ப. ரி ேய | ர், மகான்கள், ஞானிகள் என மேன்மை பெற்றுள்ளவர் யாவரும் அருளின் பான்மைகளாலேயே அதிசய நிலைகளே அடைந்திருக் கின்றனர். மலர்க்கு மணம் போல் உயிர்க்கு அன்பு இன்பமாம். அன்பொடு அருளுடையர் எனும் உயிர்கிலேமற்று என்பியக்கம் கண்டும் புறந்தரார்-புன்புலால் பொய்க்குடில் ஒம்புவரோ போதத்தால் தாம்வேய்ந்த புக்கில் குடிபுகுது வார். (திே நெறி, 87) பிற உயிர்கள் பால் அன்பும் அருளும் புரிகிற துறவிகளு டைய கிலேமையை இது கலைமையா விளக்கியுள்ளது. உயிர் நிலை இதில் குறித்து நிற்றலைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். அன்பு புரிபவர் அரிய துறவிகளாப்ப் பெரிய ஞானி களாய்ச் சிறந்த கருமவான்களாய்ச் சீர்த்தி மிகுந்த உயர்ந்த கதிகளை நேரே உரிமையா யு.அவர் என்பது தெரிய வந்தது. என்பு தோலுடை யார்க்கும் இலார்க்கும்தம் வன புலப்பகை மாசற மாய்ப்பது என்? முன்பு பின்பினறி மூவுல கத்தினும் - அனபின் அல்லதோர் ஆக்கம் உண்டாகுமோ? (இராமா, மந்தரை 16) பொறிபுலன்களை வருக்தி அடக்கி அருந்தவம் செய்வதி லும் உயிர்கள் பால் எளிதே அன்பு செப்தவரின் அவன் பேரின் பம் பெறுவான் என வகிட்டமுனிவர் இராமனிடம் இவ்வாறு சிங். வியிருக்கிரு.ர். என்பு தோல் என்ற தேவர் மொழிகள் இதில் மேவி வந்துள்ளன. அன்பே எல்லா ஆக்கங்களையும் அருளும் என்பதை இங்கே ஊன்றி நோக்கி அறிந்த கொள்ளுகிருேம். அன்பை முன்பாக் கொண்டு அதற்கு வழிபாடாப் எவல் புரிய வந்த பிறப்பே இன்பப் பிறப்பாம் என்பது அன்பின் வழியது. உயிர் நிலை என்றகளுல் உயர்லா நன்கு அறிய கின்றது.