பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அன்புடைமை 371 வழியது பக்கத்து அமரர். (பரிபாடல் 11) கொன்று பட்டு வழிமொழிய. (புறம், 17) சாறுகழி வழிகாள். (பொருகர். 2) இவற்றுள் வழி உணர்த்தி கிற்றலை விழியூன்றி அறக. உடம்பை மருவி வருகிற உயிர் அன்பைத் தலைமையாக் கொண்டுவரின் அந்த மனிதப் பிறப்புப் புனிதம் மிகவுடைய தாய்ப் புண்ணியம் பொருங்கி விளங்கும். உடம்பு என்பால் வலி யுறுகிறது; உயிர் அன்பால் ஒளிபெற்று அதிசயகிலை அடைகிறது. என்பு என்பது யாக்கை என்பது உயிர் என்பது இவைகள் எல்லாம் பின்புஎன்ப அல்ல வேனும் தம்முடை கிலேயில் பேரா முன்புஎன்ப உளஎன்ருலும் முழுவதும் தெரிந்த ஆற்றல் அன்புஎன்பது ஒன்றின் தன்மை அமரரும் அறிந்தது அன்ருல். (இராமா, மருத்துமலை, 4) என்பு, யாக்கை, உயிர் என்பன அன்பினும் பின்பானவை; இண்வ பண்புடையனவாய் உயர்வது அன்பினலேயாம்; ஆகவே உயிர் முதலிய னவற்றினும் அன்பு தலைமை யுடையது; அதனையே முன்பு என்று முதன்மையா மேலோர் முடிவு செய்துள்ளனர்; அதன் மகிமையை அமரரும் அறிய முடியாது என இது அறி வித்தளது. உயிர் நிலை அன்பின் வழியது என்னும் இக்குறளின் கருத்தை விரித்துக் கவிஞர் பிரான் இவ்வாறு சுவையா விளக்கி யிருக்கிருர். நாயனருடைய வாய் மொழிகள் கவிகளின் உள்ளங் களில் புகுந்து புதிய ஒளிகளோடு இனிது வெளி வருகின்றன. எவ்வுயிர்க்கும் இரங்கி இகம் புரிவது அன்பு sa ல ள ல் அதனையுடைய மனிதன் இனிய புனிகளுய் உயர் மகிமை அடை கிருன். அது இல்லாதவன் யாதொரு பயனுமின்றி இழித்த கழி கிருன்; ஆகவே அந்த உருவத்தோற்றம் தோலை மேலே மூடிய எலும்புக் கூடே என்று இகழ்ச்சிநிலை தெரியக் குறித்தருளினர். நல்ல மணம் இழக்கது பொல்லாத பிணம் என சேர்ந்தது. ஒன்று நாம்பென்கோ ஒன்ருத என்பு என்கோ இன்தசை தான்என்கோ யாதென்கோ-மென்தொடையாழ்ப் பண்ணுேட்டும் இன்சொற் பணேத்தோளாய் சேர்ந்தவர்.பால் கண்ணுேட்டம் இல்லாத கண். (பெருங்தேவளுர் பாரதம்)