பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கடவுள் வாழ்த்து 41 இறைவன் இன்ப மூர்த்தி ஆகலால் அவனுடைய அன்ப ரும் அவ்வாறே ஆக நேர்ந்தார். யாண்டும் என்றது எவ்வழியும் யாதும் இடும்பைகள்.அவரைத் தீண்டா என்பதுதெரியகின்றது. எக்காலத்தும், எவ்விடத்தும், எவரானும், எவற்ருனும், எவ்வகையானும், யாகொரு இடும்பையும் இலராப் அவர் திவ் விய கிலேயில் திகழ்வர் என்பதை இவ்வாறு தெளிவுறுத்தினர். வேண்டிய பொருள் எப்தா விடினும் துன்பம்; வேண்டா கன எய்தினும் துன்பம்; ஆகவே விழைவும் வெறுப்பும் தன்பக் களுக்கு எதுவாயின. இந்த இருவகைக் காரணங்களால் மூவகைத் துன்பங்கள் உயிர்களுக்கு உளவாகின்றன. மனிதன் துன்பங்களுக்கு அஞ்சுகின்ருன்; யாதொரு அல் லலும் தனக்கு கோலாகாது என்றே யாண்டும் எண்ணி நிற்கின் முன்; அங் கிலையில் உள்ள அவன் எண்ணியபடியே இடும்பை இன்றி இனிது வாழுதற்கு இதில் உபாயம் கூறியருளினர். வேண்டுதல் வேண்டாமை ஆகிய செயல்கள் இரண்டும் இல்லாதவன் ஆண்டவன் ஆகின்ருன்; ஆகவே யாண்டும் இடும் பை இல்லாமல் என்றும் அவன் இன்பமாய் இருக்கின்ருன். இன்பமயமான முன்பன கினைந்து அன்புமயமாகுல் எவ் வழியும்.அவன் துன்பம் இலய்ைச் சுகமாய் இருப்பன்; அவ்வழி யே திவ்விய மகிமையைச் செவ்வையா அருளும் என்பது இதில் உணர்க்கப்பட்டது. இவ்வுண்மை அப்பர்பால் உணரப்படும். ச ரி த ம். அப்பர் என்பவர் திருமுனைப்பாடி காட்டிலே திருவாமூரிலே வேளாளர் குலத்திலே கொறுக்கையர் குடியிலே பிறந்தார். தங்தை பெயர் புகழனர். தாயார் மாதினியார். இளமைப்பருவத் திலேயே பலகலைகளையும் இவர் வழுவறக்கற்ருர். அதன் பின் சமணமதத்தைச் சார்ந்தார். அம்மத நூல்கள் பலவும் ஆய்ந்தார்; புலமையும் போகன சத்தியும் வாய்ந்தார். இவரது பெருமை யைக் கண்ட சமணர்கள் இவரைத் தங்கள் மதத்துக்குக் கலை வர் ஆக்கித் தருமசேனர் என்ற பட்டமும் தந்து வழிபட்டு வந் கார். மருள் நீக்கியார் என்பதுதான் இவரது பிள்ளைத் திருநாமம். பாடலி புத்திரம் என்னும் நகரில் சமணமத குருவாய் இ வ. ர் , 6