பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கடவுள் வாழ்த்து 67 உணர. அளவிடலரிய கொடிய துயரங்கள் கெடிய அலைகளாப் நேரே நீண்டு மாறி மாறி அடலோடு மோதி உடல் எடுத்த உயிர் களே யாண்டும் பாதும் மீள முடியாதபடி ஆழமா ஆழ்த்தி மீண் டும் மீண்டும் அலைத்து வருதலால் கொடிய பிறவி நெடிய கடல் என நின்றது. பற்றிய பவக்கடல் தவக்கடலால் வற்றுகிறது. உலகத்தில் பரந்து விரிக் தள்ள சலக்கடலே மரக்கலத்தால் கடத்து கரை காண்கின்ருர், உயிரைத் தொடர்ந்து படர்ந்துள்ள பிறவிக்கடலைக் கடந்த பேரின்பம் கானுகற்கு இறைவன் அடியே புணையாயுள்ளது. இந்த அரிய துணையை மருவி உயர்க. அடி சேர்தலாவது அவன்பால் அன்பு கூர்தலே. இறைவனே கினைந்து உள்ளம் உருகிய அளவு அந்த உயிர் பரமனை அனுகுகிறது; அணுகவே துன்பக்தொடர்புகள் எல் லாம் நீங்கி ஒழிகிறது; ஒழியவே இன்பம்மிகப்பெருகிஎழுகிறது. இறைவனைக் கருதி யுருகிய மாணிக்கவாசகர் பிறவி தீர்ந்து பேரின்பம் அடைந்திருக்கிருர். பிறவிக்கடலை அவர் நீக்தியுள்ள நிலை ஒர்ந்து உணர வுரியது. அயலே வருவதைக் கூர்ந்து கானுக. தனியனேன் பெரும்பிறவிப் பெளவத் தெவ்வத் தடந்திரையால் எற்றுண்டு பற்றுஒன்றின்றிக் கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால் கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்டு இனி என்னே உய்யுமா றென்றென் றெண்ணி அஞ்செழுத்தின் புணேபிடித்துக் கிடக்கின்றேனே முனைவனே முதலந்தம் இல்லா மல்லற் . கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்க னேற்கே. (திருவாசகம்) பெருமான் அடிசேர்ந்து பிறவிப் பெருங்கடலை மாணிக்க வாசகர் நீந்தி விருத்தல் உருவக நிலையில் இது காட்டி யுள்ளது. எடுத்த மனிதப் பிறவிக்கு உரிய இனிய பயன் அடுத்த பிறவி அடையாமல் செய்து கொள்வதேயாம். மானிடப் பிறவி ஞான நலம் உடையது ஆதலால் அகனப் பெற்றவன் தன் உயிர்க்கு உப்தியைப் பெற வில்லை. ஆனல் பெரிய அவலமாம். பிறவிக் கடலில் காதல்எனும் பெருவாய் முதலே பிடித்தீர்க்க இறவுச் சுழியால் சுழலுமவர்க்கு இதய காவாய் எட்டாவாம்