பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 திருக்குறட் குமரேச வெண்பா கொடிய பசி நோயால் வாடி வருந்திய சீவர்களைக் கண்டு இவன் உள்ளம் இரங்கினன். தன்னிடம் இருக்க அட்சய பாத்திரத்தின் மகிமையால் யாவருக்கும் நல்ல உணவுகளை ஊட்டினன். எல்லாரும் உண்டு மகிழ்ந்தனர்; பசித்துயர் நீங்கி மலர்ந்த முகங்களோடு உவந்திருந்த மக்களைக் கண்டு உள்ளம் உவந்து மேலும் மேலும் இவன் உதவி புரிந்து வந்தான். கருணை சுரங்க இவனுடைய புண்ணிய நீர்மையை அறிந்து வியந்து விண்ளுேர் வேந்தன ஒரு முதிய வேதியன்போல் வ. டி. வ ம் கொண்டு நேரே வந்து கருமசீலா! உனது அருள்.அறம் பெரிது; என்ளுேடு நீ பொன்னுலகம் வரவேண்டும்; நான் பொன்னுட்டு வேந்தன்; உன்னை அழைத்துப்போக வந்தேன்’ என்று உரிமை யோடு உரைத்தான். அவனை நோக்கி இவன் சிரித்தான்: தேவர் கோவே! நான் சீவர்களுக்கு இகம்செய்து இங்கே பேரின்பம் உறுகின்றேன். தீய பசி நோயை நீக்கி உயிர்களை மகிழ்விக்கும் இந்தப் பெரும் பேற்றை இழந்து வெறும் போகக் களிப்புக்களே நிறைந்துள்ள உன் உலகிற்கு வரேன்; என்னுல கே எனக்கு இனியது' என இவன் துணிந்து சொன்னன். இந்திரன் சினந்தான். தனது தானச் செருக்கால் தன்னை அவ மதித்தான் என்று வெகுண்ட அவன் எங்கும் மழைபொழியச் செய்தான். அவ்வாறே பெய்தது; யாண்டும் செழித்தன; எவ் வழியும் வளங்கள் கொழித்து கின்றன. வறியவர் எவரையும் காணுமையால் யாதொரு உதவியும் செய்ய முடியாமல் இவன் ஒதுங்கிப் போனன். "ஈண்டுர்ே ஞாலத்து இவன் செயல் இந்திரன் பாண்டு கம்பளம் துளக்கியது ஆதலின் தளர்ந்த நடையில் தண்டுகால் ஊன்றி வளைந்த யாக்கைஓர் மறையோன் ஆகி 5. மாயிரு ஞாலத்து மன்னுயிர் ஒம்பும் ஆருயிர் முதல்வன் தன்முன் தோன்றி இந்திரன் வங்தேன் யாதுகின் கருத்து? உன்பெருங் தானத்து உறுபயன் கொள்கென வெள்ளே மகன்போல் விலாவிற கக்கிங்கு 10. காள்ளினன் போம்என்று எடுத்துரை செய்வோன் ஈண்டுச் செய்வினை யாண்டு நுகர்ந்திருத்தல் காண்டகு சிறப்பின்தும் கடவுளர் அல்லது அறம்செய் மாக்கள் புறங்காத்து ஒம்புகர்