பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வான் சிறப்பு 99 காய்சின வெய்யோன் சேயோன் முன்செலக் கதிர்கால்வெள்ளித் தேசிகன் பின்பு சென்று நடக்கும்.இச் செயலான் முந்நீர்த் துளசின உலகில் பன்னி ராண்டு வான் சுருங்கும் என்று பேசின நூல்கள் மாரி பெய்விப்போற் சென்றுகேண்மின். (3 (திருவிளையாடல்) மேலே குறித்த உண்மை இதன் கண்னும் விளங்குதல் காண்க. மழைநீர் இலதேல் மறிகடலும் மாறிப் பிழைநீர் பெருகும் பிறழ்ந்து. வாரியும் மாரியால் வளம் பெறுகின்றது. 18. வென்றி மதுரையில்முன் மெய்ச்சிறப்பும் பூசனையும் குன்றிகின்ற தென்னே குமரேசா-என்றும் சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானேர்க்கு மீண்டு. (அ) இ-ள். குமரேசாl முன்னம் மழை இல்லாதபொழுது மதுரையில் பூசையும் சிறப்பும் ஏன் குன்றி கின்றன? எனின், வானம் வறக்குமேல் வானேர்க்கும் ஈண்டுச் சிறப்பும் பூசனையும் செல் லாது என்க. நீர் இல்லையேல் சீர் இல்லை என்பது தெரிய வங்கது. சிறப்பு=திருவிழா. கிக்கலும் செப்துவருகிற தெய்வ வழி பாடுகள் பூசனையாம்; புண்ணிய தினங்களில் விசேடமாகச் சிறந்த முறையில் செய்கிற உற்சவங்கள் சிறப்பு என வந்தன. ஊரும் நாடும் உவந்து வாழ்ந்து வரும்போதுதான் தேரும் திருவிழாவும் சிறந்து கடந்துவரும். மாக்கர் மகிழ்ந்து வாழ்வது வளமான செல்வங்களாலேயாம்; அந்தச் செல்வ வளம் மழை பொழிவதால் வளர்ந்து வருகிறது; அது வறந்து கின்ருல் வளம் குறைந்து போம்; அது குறையின் மக்கள் வாழ்வு தாழ்வாம்; ஆகவே தெய்வ வழிபாடுகள் ஆர்வமாச் செய்ய முடியா. மழை பெப்யாகாயின் இவ்வுலகத்தாரால் தேவர்க்குச் செப் யப்படும் விழவும் பூசையும் கலமா சடவா என்பதாம். o நீர் கிறைங்க கடலும் மழை இல்லையானுல் சீரழிந்துபடும் என்பதை முன்பு அறிக்கோம்; தேவரும் பூசனைகளை இழந்து கேசழிக்க நிற்பர் என்பதை இங்கு அறிகின்ருேம். உம்மை அவரது இயல்பையும் உயர் நிலையையும் நன்குஉணர்த்திகின்றது.