பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1380 திருக்குறட் குமரேச வெண்பா திருடர்களைச் சித்திாவகை செய்து கொன்று கொலைத் திருப்பகை இதில் உய்த்துணர்ந்து கொள்கிருேம். இவ்வாறு பழியாய் அழிவடைந்து இழிவாய்க் கழிதலால் உயிர் கிலையான உடம்பும் கள்வர்க்கு உதவாமல் ஒழிகின்றது. பொல்லாக இக் களவின் புலைகளை அணுகாதவர் கல்ல மேலோர்களாய் உயர்கின்ருர். உள்ளம் தாய்மையான புண்ணிய சிலர்க்கு விண்ணுலக இன்பம் கேரே உரிமையாய் அமையும் ஆதலால் கள்ளார்க்குப் புத்தேள் உலகு தள்ளாது என்ருர். தள்ளும் கள்ளாத என்றது. கள்ளல் கள்ளாமைகளால் விளையும் பலன்களை வியனு விளக்கி நின்றது. களவு ஒழிந்து புனிதமுடன் வாழ்ந்து எவ்வழியும் செவ்வியகுய் இன்பம்பெறுக. களவு செய்ய கேர்ந்தவர் உரிய உயர் கலங்களையெல்லாம் ஒருங்கே இழங்து பரிதாபமாய் இழிந்து பதைத்து வருங்துவர். இவ்வுண்மை வசுக்கள் எண்மர்பால் கேரே அறியகின்றது. சரிதம் வசுக்கள் என்பவர் விண்ணுலக வாசிகள். திசை காப்பாளர் போல் ஒரு தொகையாய் இசை காக்து வந்தவர். அனலன், அணிலன், ஆபச்சைவன், தான், துருவன், சோமன், பிரத்தியூசன், பிரபாசன் என்னும் இந்த எண்மரும் நண்பராய் இணைக்கிருக்க மையால் அட்ட வசுக்கள் எனப் பேரும் சீரும் பெற்றிருக்கனர். இவருள் பிாபாசனுடைய மனைவி பேரழகி. ஒரு நாள் அவள் அருந்ததியின் விருக்கினளாய்ப் போயிருக்காள். அங்கே இருக்க காமதேனுவின் திவ்விய மகிமையை அறிந்து வியக் காள். விருந்து முடிந்ததும் விட்டுக்கு வந்தாள். அந்தப் பசுவை எப்படியும் கொண்டு வந்து விட வேண்டும் என்று கணவனிடம் வேண்டினுள். அவளுடைய சொல்லைத் தட்ட முடியாமல் இசைந்து துனே வரிடம் போய்ச் சொன்னன். அவரும் இணங்கி ஞர். இரவே கள்ளமாய்க் காந்து போய் வசிட்டரிடமிருக்க அந்தப் பசுவைக் கவர்ந்து கொண்டு வந்தனர். முனிவர் மறுகாள் அறிந்தார். முனிந்தார். உயர்ந்த பதவியிலிருக்தம் இழிக்க இந்தச் செயலைச் செய்தாரே என்று சிங்தை கொங்க அவர் இவரை இழிந்த பிறவியில் பிறந்து உழல்க என்று சபித்தார்.