பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்தேழாவது அதிகாரம். த. வ ம். அஃதாவது அரிய விரத சீலங்கள் மருவிய பெரிய நெறி கியமம். உயிர்களுக்கு இாங்கி உயரருள் ஒங்கிப் புலை நிலை நீங் கிப் புனித நிலையில் உயர்ந்த துளய தலைமை யாளர்க்கே தவம் தகவாய் அமையும் ஆதலால் ஈண்டு இனமா இசைந்து நின்றது. 261. கண்ட துயர்பொறுத்துக் கண்ணுவரும் காசிபரும் கொண்டார் தவமேன் குமரேசா-உண்டாகி உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. (க) இ-ள் குமரேசா கண்ணிய துயர்களைச் சகித்துக் கண்ணு வரும் காசிபரும் என் உறுதியாய் எண்ணித் தவம் பண்ணினர்? எனின், உற்ற கோய் கோன்றல் உயிர்க்கு உறுகண் செய் யாமை அற்றே கவத்திற்கு உரு என் க. தவத்தின் தகைமையை இது உணர்த்துகிறது. தமக்கு கேருகிற துயர்களைப் பொறுத்தலும் பிற உயிர் களுக்கு யாகொரு துயரும் செய்யாமையுமே கவத்தின் வடிவமாம். அரிய கவ உருவம் தெரிய வந்தது. ஒரு பெயரைக் கேட்டவுடனே அதற்கு உரிய உருவத் தைக் காண விரும்புவர். அங்கக் காட்சி இங்கே காண வங் தது. திவத்தின் அக உடலும் புற உடலும் முறையே அறிய கின்றன. இரு வகையும் மருவிய அளவு பெரிய தவசி ஆகிருன். கோன்றல்= பொறுத்தல், சகித்தல். பேதையார் சொல் நோன்றல். (கலி,133) தமர் தன் தப்பின் அது நோன்றல். (புறம்,157) இவற்றுள் கோன்றல் குறித்து நிற்றலைக் கூர்ந்து அறிக. கேர்கின்ற அல்லல்களைச் சகித்துக் கொண்டு உள்ளம் கள சாமல் ஆற்றுகின்றமையால் நோற்றல், கோன்றல், நோன்பு என் பன தவத்துக்கு ஏற்ற பெயர்களாய் ஈண்டு இயைந்து வந்தன. 154