பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த வ ம் 1245. ஆதரித்த யாண்டும் யார்க்கும் உபகாரம் புரிவதையே பெருங் தவமாய்ப் பேணி வங்கமையால் இவரது கீர்த்தி எங்கும் பரவி கின்றது. பாவலரும் இவரை வியந்து பாடி வந்தனர். விண்ணிலொரு சோமன் விளங்கிஒளி வீசுகின்ருன் மண்ணிலொரு சோமன் வயங்கியே-எண்ணரிய சீவருக் கின்பநலம் செய்து புகழொளியால் மேவி மிளிர்கின்ருன் மேல். பேரும் சீரும் இவ்வாறு பெருகி வர இவர் கான கருமங்களை உரிமையாச் செய்து வந்தார். துறந்தார்க்குத் துப்புரவு செய்ய நேர்க்கவர் சிறக்க கவத்தையும் அங்கு மறந்து விடுவர் என்பதை உலகம் இவர் பால் நன்கு உணர்ந்து தெளிந்து கின்றது. மாதவமே மன்னுயிர்க்கு மாண்பாகும் மற்றதையே ஆதரவாய்ச் செய்க அமர்ந்து. தவத்தை மறந்து விடாதே 264. ஏசியும் ஏத்தியும் ஏனே விருச்சிகரும் கோசிகரும் நோற்ருர் குமரேசா - கூசாமல் ஒன்னுர்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும். (4) ■ இ. ள். குமரேசா அடுத்தவரை ஆக்கியும், கடுத்தவரைக் காய்ந்தும், விருச்சிகரும், கோசிகரும் என் தவத்தினைப் போற்றி நின்ருர்? எனின், ஒன்னுர்த்தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும் என்க. வாவு கிலை கருதியுணா வுற்றது. தவத்தின் அம்புத மாட்சிகள் காட்சியுற வக்கன. வெறுக்காரை அழித்து ஒழித்தலும் விரும்பினரை ஆக்கி ஆதரிக்கலும் தவசிகள் க ரு கி ன் அவர்க்கு அவை உடனே உளவாம். அரிய ஆற்றல்கள் அறிய கின்றன. தவம் அதிசய ஆற்றல்கள் அமைந்தது; அதனையுடையவர் எவரினும் உயர்ந்து எவ்வழியும் கிவ்விய மேன்மைகள் நிறைந்து திகழ்கின்ருர் அவர் எதிரே அமாரும் அடங்க நேர்கின்ருர். அந்த அம்புத நிலைமை கலைமையாய் இங்கே கன்கு தெரிய வந்தது.