பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1252 திருக்குறட் குமரேச வெண்பா ஈண்டுநீர் ஞாலத்துள் எங்கேள்வர் இல்லாயின் மாண்ட மனம்பெற்ருர் மாசில் துறக்கத்து வேண்டிய வேண்டியாங்கு எய்துதல் வாயெனின் யாண்டும் உடையேன் இசை. (கலி, 143) தாய மனமுடைய பதிவிாகை சுவர்க்கத்தில் பெறுகின்ற பேற்றை இவ்வாறு உாைத்திருக்கிருள். வேண்டிய வேண்டி யாங்கு எய்துதல் மெய் என்று இப்பொய்யாமொழியைக் குறித்துக் காட்டியிருப்பது கூர்ந்து சிங்கிக்கவுரியது. சொல்லும் பொருளும் கருத்தும் குறிப்பும் ஊன்றி உணரத்தக்கன. வேண்டின வேண்டினர்க்கு அளிக்கு மெய்த்தவம் பூண்டுளர் ஆயினும் பொறையின் ஆற்றலால் மூண்டெழு வெகுளியை முதலில் நீக்கினர் ஆண்டுறை அரக்கரால் அலைப்புண்டாரரோ இராமா, அகத்திய, 8) தண்டகவனக்கிலிருக்க தவசிகள் நிலைமையை இது குறிக் தள்ளது. வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய்த் தவம், பூண்டுளர் என்னும் இதில் கேவர் வாய்மொழி பொலிங்து விளங்குகிறது. தவ நிலை கனி மகிமையாயுளது. ஈண்டு என்றது இவ்வுலக கிலையை ஊன்றி உணர வந்தது. யாதும் நிலையில்லாமல் எவ்வழியும் இங்கு வெவ்விய துயாங்களே விரிந்து பாந்துள்ளன. வேண்டியன கிடையாமல் யாண்டும் ஏமாந்து வருந்துவதும், வேண்டாகன எய்தி வெந்துயர் உறுவ தும் மானிடங்களிடம் எவ்வழியும் நீண்டு கிற்கின்றன. அவல மான இக் கவுலகில் விரைந்து தவத்தைச் செய்துகொள்ளுங்கள். அது உங்களுக்கு உயர்க்க மகத்துவங்களையும், மகிழ்ச்சிகளையும் விளைத்தருளும் என விளக்கியுள்ளார். மனிதனுடைய வாழ்வு தவத்தால் புனிதமடைந்து உயர்கிறது. அதைச் செய்தவர் தெய்விக நிலையை எய்துகின்றனர். பருதி சூழ்ந்த இப் பயங்கெழு மாநிலம் ஒருபகல் எழுவர் எய்தி யற்றே வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு ஐயவி அனைத்தும் ஆற்ருது ஆகலின் கைவிட் டனாே காதலர் அதனல் விட்டோரை விடாஅள் திருவே விடாஅ தோர் இவள் விடப்பட்டோரே. (புறம், 358)