பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1296 திருக்குறட் குமாேச வெண்பா அப்பெரு வேடம் கொண்டே அற்றத்தில் வெல்வா கைச் செப்பரு நிலைமை எண்ணித் திருக்கோவ லூரில் சேர்வான். (1) மெய்யெலாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டிக் கையினில் படைக் கரந்த புத்தகக் கவளி ஏந்தி மைபொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்துப் பொய்தவ வேடங் கொண்டு புகுந்தனன் முத்த நாதன். (2) மாதவ வேடம் கொண்ட வன்கணுன் மாடம் தோறும் கோதைசூழ் அளக பாரக் குழைக்கொடி ஆட மீது சோதிவெண் கொடிகள் ஆடும் சுடர்நெடு மறுகிற் போகிச் சேதியர் பெருமான் கோயில் திருமணி வாயில் சேர்ந்தான் (3) (பெரியபுராணம், 11) இவ்வாறு வஞ்ச வேடம் பூண்டு கெஞ்சம் துணிந்து அவ் வேந்தன் அரண்மனைக்குள் இவன் விரகுடன் தழைக்கான். சாங்க சீலனை அவ் அரசன் இவனது காவு நிலையை யாஅம் உணராமல் உரிமையோடு கொழுது வணங்கி உபசரித்தான். தன்னை முழுதும் கம்பித் தனியணுய் உபசரிக்குங்கால் இவன் மறைத்து வைக் கிருந்த வாளால் விரைந்து அவனை வெட்டி விழ்த்தினன். கொலையுண்டு சாக கேர்ந்த போதும் அத் தலைமகன் இப் புலைமகனுக்கு யாகொரு தீங்கும் செய்யாமல் பாது காத்து விடுப் படி பாங்கில் கின்றவர்பால் பணித்து மசண் டான். படுகொலை செய்து போன இப் பாதகனே வையம் வெறுத்து வை.து பழித்தது. அடு துயரங்கள் பல அடைந்து இவனும் அழிக்கான், தவ வேடம் பூண்டு அவகேடு செய்க கொடிய பாவி என்று நெடிய பழி யாண்டும் நீண்டு நின்றது. வஞ்ச மனத்தளுய்ப் பழிச் செயல் செய்பவனைப் பஞ்ச பூதங்க ளும் எள்ளி இகழும் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி கின்ருன். காவிய உலகமும் இவனது சீவியத்தைக் கடிக்கு இகழ்ந்து வருதலால் என்.றம் கிலையான பழியால் தொலையாக இழிவுகளில் தொடர்ந்து படிந்து இவன் புலையடைந்துள்ளான். உள்ளம் கரவாகி ஊனம் புரிபவா எள்ளலே காண்பர் இழிந்து. கூடா ஒழுக்கம் கேடே விளைக்கும்.