பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 148 திருக்குறட் குமரேச வெண்பா கல்லாமை என்ருல் என்ன? நூலறிவு இல்லாமை யே. இந்த உண்மையைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளும்படி முதலில் தலைமையாக் குறித்தருளினர். நூல் இன்றி என்ற குறிப்புரை கூர்மையாய் ஒர்க்து கொள்ளவங்தது. கல்வி கண் என எண்ணத் தக்கது: உணர்வுக்கு ஒளி தருவது: உயிர்க்கு எவ்வழியும் இனியது; இத் தகைய கல்வியைப் பெற்றவனே உத்தம மனிதனுய் ஒளிமிகுந்து வருகிருன் என்று முன்னம் உணர்த்தி யரு ளிர்ை. ஈண்டு அதனே மீண்டும் எதிர்மறை முகத்தால் தெளிவாக வலியுறுத்தித் துலக்கி யிருக்கிரு.ர். மனிதன் வாய் படைத்த பயனேக் கல்வியால் பெறு கின்ருன் கல்லாமல் கழிந்து கின்ருல் பொல்லாத புலே யிலிழிந்து கோப் படைத்தவனுய் நொந்து படுகிருன். நூல் இன்றிக் கோட்டிகொளல் கோட்டித்தனமாம் என்று காட்டியது நூல்களேக் கற்று மேலோனுகுக என அறிவூட்டிய படியாம். அறிவு ஒளி ஏறிவர மொழி தெளி வேறி வரும். தேசுடன் கற்றுத் தெளிவுடன் பேசுக. கல்லாதார் அவை ஏறி ஆரவாரமாய்ப் பேசிலுைம் அவர் நல்ல மதிப்படையார்: அவமானமே அடைவர். இது சாகர் பால் அறிய வந்தது. ச ரி த ம். சாகர் என்பவர் ஈழ நாட்டிலிருந்து சோழ நாட்டிற்கு வந்தவர். புத்த மதத்தினர். அருள் மதத்தின் பொருள் அறியாமல் மருள்மண்டி கின்றனர். மதவெறி மீறிச் சிவ நித்தனே செய்து வந்தமையால் தில்லைவாழ் அங்தணர்க் கும் இவர்க்கும் பகைமைமூண்டது. தெய்வ வழிபாட்டில் மாறுபட்டு வெப்ப வழியில் வீறுகொண்டு கின்ற இவர் அவரை வாதுக்கு அழைத்தார். நூல்களே நன்கு கல்லாத வராயினும் வம்புபேசி வாதம் புரிவதில் வல்லவராயிருங் தனர்; அதல்ை தில்லைவேதியர் இவரோடு சொல்லாட அஞ்சினர், அவ்வமையம் அங்கே மாணிக்கவாசகர் வங் தார். ஊரார் எல்லாரையும் வாதுக்கு அழைத்து ஏதம்