பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 192 திருக்குறட் குமரேச வெண்பா கொண்டாடுகின்றனர். உரிய கல்வியே அரிய தெய்வத் திருவாய்ப் பெரிய அழகாய் அவனுக்கு எவ்வழியும் பெருமகிமைகளே உரிமையோடு அருளி வருகின்றது. குஞ்சி அழகும் கொடுந்தானேக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல-நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலே மையால் கல்வி அழகே அழகு. (நாலடி 131) இடைவனப்பும் தோள்வனப்பும் ஈடின் வனப்பும் நடைவனப்பும் நாணின் வனப்பும்-புடைசால் கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்னேறடு எழுத்தின் வனப்பே வனப்பு. (ஏலாதி 75) செல்வி வளர்திருக் கோடீச்சு ரேசர் செழுங்கிரிமேல் சொல்விறல் உற்ற அறமுதல் நான்கும் தொகஇயற்றும் பல்வித மான புகழ்நல்கும் வேந்தர் பாவச்செயும் கல்வி அழகே அழகாம் எவருக்கும் காரிகையே ! (கோடீச்சுரக்கோவை 421) கல்வியே மனிதனுக்கு உண்மையான நல்ல அழகு என இவை குறித்துள்ளன. இந்த உயிரழகு இல்லே பானுல் அந்த உடல் அழகு கடையாம். மலர்க்கு மனம் எனக் கல்வி உயிர்க்கு மனபாம். வார மலர் போல் தேசம் எங்கும் கல்விமான் சிறந்து திகழ்ன்ெருன். உருவ அழகு பொருள்வளம் குலமாட்சி முதலிய உயர்கலங்கள் எல்லாம் ஒருவனுக்கு ஒருங்கே வாய்க் திருந்தாலும் கல்வி ஒன்று இல்லே யால்ை அவன் கல் லாப் புல்லன் என எள்ளலடைந்து இழிகின்ருன். குலமிக உடையர், எழில்மிக உடையர், குறைவில்செல் வமுமிக உடையர், தலமிக உடையர் என்னினும் கல்வி ஞானம் அற்பமும் இலா தவரை வலமிகு திகிரிச் செங்கையாய் ! முருக்கின் மணம் இலா மலர் என மதிப்பேன் சலமிகு புவியில் என்றனன் வாகைத் தார்புனே தாரை மா வல்லான். (பாரதம்: பழம்பொருந்து 19)