பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2244 திருக்குறட் கு மரேச வெண்பா அவி உணவு = தேவர் உவந்து உண்ணும் உணவு. அவி யுனவினுேர் புறம் காப்ப. (புறம் 377) அவி யுடன் பெய் தோர். (பரி பாடல் 5) அவியை நாய் வேட்டது என்ன. (இாமா. 3-8-69) இவற்றுள் அவி குறித்து வந்துள்ள மை காண்க. சருவும் பலியும் நிவேத்தியமும் அமுதும் அவியும் தெய்வ உணவு ஆகும்மே. (சிங்கலந்தை) கேள்வி மறையோர் கிளே மகிழ்தல் என் வியப்பாம் வேள்வி விறல்வேந்தன் தான் வேட்ப- நீள்விசும்பின் ஈர்ந்தார் இமையோரும் எய்தி அழல் பால் ஆர்ந்தார் முறையால் அவி. (புறப்பொருள்) செவிவயின் அமிர்த கேள்வி தெவிட்டினுர் தேவர்.நா வின் அவிகையின் அளிக்கும் நீரார் ஐயிரு கோடி சூழக் கவிகையின் நீழற் கற்பின் அருந்ததி கணவன் வெள்ளைச் சிவிகையின் அன்னம் ஊரும் திசைமுகன் என்னச் சென்ருன். (இராமா: பால, எழுச்சி 71} செவியுணவினேயுடைய சான்ருேரையும் ,அவி யுண வினையுடைய ஆன்ருேரையும் ஈண்டு ஒருங்கே கண்டு உள்ளம் உவந்து கொள்கிருேம். கவிகளில் கனிந்துள்ள அவைகளைக் கருதி யுணர்பவர் கேள்வியாளரின் அதிசய மகிமைகளேத் தெளிவா அறிந்து வியந்து கொள்வர். ஆன்ருேர் என்றது இங்கே தேவர்களேக் குறித்து நின்றது. அறிவால் நிறைந்த மேலோர்கள் ஆதலால் ஆன்ருேர் என வா ன் ேதா ய் புதழுடன் தெரிய நேர்ந்தனர். ஆன்றல் = நிறைதல். அறிவு ஒழுக்கம் அருள் அமைதிகளால் நிரம்பியுள்ள பெருங்தகையாளர் இஷ் வாறு பேர் பெற்றுள்ளனர். அரிய சீரும் பெரிய, சிறப்பும் இப்பேரால் தெரிய வங்துள்ளன. அருமுனரி மரபின் ஆன்றவர். (பரி பாடல் 10} ஆன்றவர் உணர்த்திய. (இராமா: 2-11-5) ஆன்றமை கேள்வியர். (இராமா: 6-2-9}