பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

oš6 திருக்குறட் குமரேச வெண்பா காட்டமுடன் கேள்வி கயவாது கின்றதேல் ஒட்டைச் செவியே உணர். கேள்வி இல்லாத செவி பாழே.

=

419. கஞ்சன் சிசுபாலன் கண்ணில்லான் சேய்வனக்கம் கொஞ்சமும்கொள் ளாரேன் குமரேசா-நெஞ்சில் துணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது. (க) இ-ள். குமரேசா : கஞ்சன், சிசுபாலன், துரியோதனன் என்னும் இவர் ஏன் வணங்காத வாயினராய் யாண்டும் பினங்கிச் செருக்கிப் பிழை நீண்டு நின்ருர் ? எனின், துணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது என்க. கண் இல்லான் சேய் என்றது துரியோதனனே. இவனுடைய தந்தை ஆகிய திருதராட்டிரன் இரண்டு கண்களும் தெரியாத அந்தகன் ஆதலால் அவனது மைந்தன் இங்கனம் கூற வந்தான். குருடன் மகன் செவியின் பயனேயும் இழந்து இறுமாந்து இழிந்து கின் ருன். ஒட்டைச் செவியனை அந்தக் கேட்டு நிலே இங்கே தேட்டமாய்த் தெரியவந்தது. தக்க கேள்வி இல்லார் தருக்கி இழிவர் என்கிறது. துணுகிய நல்ல அறிவுரைகளேக் கேளாதவர் பணி வான மொழியுடையராய்ப் பண்பு ப டி ந் து வாழ முடியாது. பணிவும் இன் சொல்லும் மனிதனே மகிமைப் படுத்தி வருகின்றன. தெளிந்த அறிவும் சிறந்த நீர்மை யும் உடையாரிடமே இவை உறவா அமைகின்றன. உணர்வு தெளிவாய் வர உள்ளம் ஒளி பெற்று வருகிறது. வரவே அந்த மனிதன் அடக்கமும் அமைதி