பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பத்து மூன்ருவது அதிகாரம் அ றி வு ைட ைம அ.தாவது அறிவின் உரிமையான உறுதிகிலே. மனிதனுடைய வா ழ் வு எவ்வழியும் செவ்வையாய் இனிது கடந்து வருவது மதிநலத்தாலே யாம். பொரு ளுடைமை முதலிய எல்லா உடைமைகளும் பொலி வடைந்துவர ஒளிபுரிந்து வருதலால் அறிவுடைமை அதிசய உடைமையாய்த் துதி மிகுந்துள்ளது. கல்வி கேள்விகளால் அறிவு தெளிந்து சிறந்து வருதலின் அவற்றின் பின் இ.து உரிமையாய் அமைந்து கின்றது. 421. உற்ற அறிவால் உயர்நம்பி அற்றமின்றிக் கொற்றமுற்றேன் நின்ருன் குமரேசா-பெற்ற அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா வரண். (க) இ-ள். குமரேசா : பாண்டியன் அறிவுடை நம்பி யாண்டும் அற்றம் இன்றி வெற்றியுடையனாய் ஏன் விளங்கி கின் முன் ? எனின், அறிவு அற்றம் காக்கும் கருவி: செறு: வார்க்கும் உள் அழிக்க லாகா அரண் என்க. அறிவின் அரிய உதவிகள் அறிய வந்தன. அரசர்க்கு அறிவு அவலம் நேராமல் காக்கும் அரிய துணை பகைவர்க்கும் கடக்க முடியாத வலிய அரணும். அற்றம் = அழிவு: குறை: கேடு. குற்றமே அற்றம் தரூஉம் பகை. (குறள் 434). அற்றம் மறைக்கும் பெருமை. (குறள் 980) அற்றம் மறைத்தல். (குறள் 846) விளக்கு அற்றம் பார்க்கும் இருள். (குறள் 1186). இவற்றுள் அற்றம் குறித்திருத்தலேக் கூர்ந்து அறிக.