பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23.48 திருக்குறட் குமரேச வெண்பா அரிய பெரிய செல்வங்களே அடைந்து இருமையும் பெருமை மிகப் பெற்ருன். அரச செல்வங்களே எப்தி: யிருந்தும் உத்தமன் மடமையால் யாவும் இழந்து இழிந்து அழிந்தான். அறிவுடையார் எல்லாம் உடை யார்; அறிவிலார் என்னுடையர் ஏனும் இலர் என்னும் உண்மையை இந்த இருவரும் முறையே உணர்த்தி நின்ருர். காசி காண்டம், பாகவதம், மச்சபுராணம். விண்டுபுராணம் முதலிய நூல்கள் இவருடைய சரிதங் க&ளத் தெளிவாக விரித்து விளக்கி யுள்ளன. எல்லாம் உடையான் இறைவன்; அறிவுடையார் எல்லாம் உடையார் என நின்ருர்-நல்ல அறிவொன் றுளதேல் அகிலமும் அன்னர் நெறிநின் றிலகும் நெடிது. அறிவே உடைமை; அயலுடைமை எல்லாம் வெறியே மடமைக்கு வித்து. உணர்வுடைமையே உயிர் உடைமை. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. 1. அறிவு இறுதி நீக்கி உறுதி யருளும். 2. உள்ளத்தை நெறியே நடத்தி உயர்வு தரும். 3. மெய்ப்பொருளைக் கண்டு மேன்மை புரியும். 4. நுண்பொருள் நோக்கி நோன் மை யாக்கும். 5. உலகம் தழுவி ஒழுகச் செய்யும். 6 யாவரோடும் இதமாய் இனிது நடத்தும். 7. ஆவதை அறிந்து ஆதரவு காணும். 8. அஞ்சுவதை அஞ்சித் தஞ்சம் விளேக்கும். 9. எதிர்வதை எண்ணிக் காத்து ஏற்றம் காட்டும். 10. அறிவே அரிய திரு; அறிவின்மை பெரிய வறுமை. 43-வது அறிவுடைமை முற்றிற்று.