பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2378 திருக்குறட் குமரேச வெண்பா பெற்று விளங்கின்ை. தன்பால் யாதும் குற்றமில்லா திருந்தும் குற்றம்போல் தோன்றியதையும் இவன் நீக்கி யருளின்ை. இவனுடைய குணநீர்மைகளேக் கண்டு குடி மக்கள் எல்லாரும் குற்றம் கடிந்து குணம் படிந்து வாழ்ந்தனர். தன் பால் யாதொரு குற்றமும் நேராமல் அரசன் நீக்க வேண்டும் என்பதை உலகம் காண இவன் காட்டி யருளின்ை. வழுதி மரபுள் இவனது அரிய சரிதம் விழுமிய கிலேயில் பெரிதும் விளங்கி வருகிறது. உதவா வாழ்க்கைக் கீரந்தை மனேவி புதவக் கதவம் புடைத்தனன் ஓர் நாள்: 'அரச வேலி யல்லது யாவதும் புரை தீர் வேலி இல்லென மொழிந்து மன்றத் திருத்திச் சென் றீர்! அவ்வழி இன்றவ் வேலி காவாதோ?’ எனச் செவிச் சூட் டானியிற் புகையழல் பொத்தி நெஞ்சம் சுடுதலின் அஞ்சிநடுக் குற்று வச்சிரத் தடக்கை அமரர் கோமான் 10 உச்சிப் பொன்முடி ஒளிவளை யுடைத்தகை குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து இறைக்குடிப் பிறந்தோர்க்கு இழுக்க மின்மை. (சிலப்பதிகாரம் 23) குற்றம் குறைகள் யாதும் படியாமல் இக்கோமகன் புரிந்துள்ள நீதிமுறைமையை மதுராபதி என்னும் தெய் வம் இவ்வாறு வியந்து புகழ்ந்துள்ளது. மேலே குறித் துள்ள சரிதத்தை இதில் உணர்ந்து கொள்கிருேம். இறைக்கு உரிய நீர்மையை அடிகள் உணர்த்திய படியே இறைக்குடிப் பிறந்த இந்தக் குணக்குரிசில் கெறி முறையே நடந்து குடிகளே இனிது பேணி நீதி கிலேயை நெடிது விளக்கி யிருக்கிரு.ர். 5 எனக்குத் தகவன்ருல் என்பதே நோக்கித் தனக்குக் கரியாவான் தானுய்த் தவற்றை நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனும்; காணுர் எனச்செய்யார் மாணு வினே. (பழமொழி 102) தீமைசெய் தாய்போல் செங்கை குறைத்தாய் முறையேயோ! (திருவிளேயாடல்)