பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. கு ற் ற ம் க டி த ல் 23.95 ாறு காவாதவன் காவலன் என எதிர்மறையாய் மேவி இந்:ன் முன். கடிவன கடிந்து காப்பன காத்தருள். தனது நீதிநெறியின் படி செவ்வையாய்த் தெளிந்து மன்னவன் முன்னுற நடந்து வந்த போது தான் மாங் தரும் அவ்வேந்தனே வியந்து போற்றி வருவர். தான்.இனி தியற்றும் மனுநெறிப் படிமுன் தான் நடந் தறவழி காட்டி ஞானதற் குணத்தின் மேன்மையால் எவர்க்கும் நாயகன் தானெனத் தெரித்துத் தானமும் தயையும் மெய்மையும் தவமும் தற்பரன் வணக்கமும் பொறையும் மானமு மிகுத்து நரரெலாம் செழிக்க மகியது சளிப்பவன் மன்னே. (நீதிநூல்) உண்மையான அரசனுடைய உத்தம நீர் மைகளே யும் வித்தகவிவேகங்களேயும் இ.து உணர்த்தி யுள்ளது. குற்றங்கள் நீங்கிக் குணங்கள் ஓங்கி எவ்வழியும் செவ்வியனுப் இசை பெற்று உயர்வுற்று வருபவனே வெற்றி வேந்தனய்ச் சிறந்து திகழ்கின்ருன். தன் விருப்பத்தை அடக்கமாக நடத்த வல்லவன் அதிசய வெற்றிகளே கன்கு அடைந்து கொள்கின்ருன். இவ்வுண்மை வன்னி பால் அறிய நின்றது. ச ரி த ம் வன்னிவானவன் என்னும் அக்கினி தேவன் காண் உவ வனத்தை உண்ண விரும்பின்ை. அரிய பல ஒடதி கள் நிறைந்துள்ள அந்தக் கானகத்தை அருந்த விழைந்த இவன் அதற்கான உபாயங்களே மருமமாய் ஆராய்ந்து வந்தான். அந்த வனம் தேவராசனை இந்திரனுக்கு உரியது; தான் புகுந்து துகர நேர்ந்தால் அவன் மேகங் களே ஏவி வேகமாயவித்து விடுவான் ஆதலால் அவ்வாறு நேராதபடி நெடிது சூழ்ந்து வந்த இவன் ஒரு நாள் கடிது துணிந்தான். வசந்த காலத்தில் கண்ணனும் விசயனும்