பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பதாவது அதிகாரம் க ல் வி அ.தாவது கற்றற்கு உரிய நூல்களேக் கற்றுத் தெளிதல். பொருள் முதலிய எல்லா கலங்களேயும் எய்தி இன்புறுதற்கு ஏதுவாய் உள்ளது அறிவு. அந்த அறிவு கல்வியால் ஒளிமிகுந்து விளங்குகின்றது. இத் தகைய கல்வியை அரசன் அதிக உரிமையுடன் பருவம் தவருமல் கற்று உயர்ந்து கொள்ள வேண்டும். கல்லா மல் கழிந்து நிற்பின் அவன் ஆட்சி பொல்லாததாய் இழிந்து புலைபடிந்து நிலைகுலைந்து ஒழிந்து போம். கல்லா அரசனும் காலனும் நேர்ஒப்பர்; கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்; கல்லா அரசன் அறம்.ஒரான்; கொல்என்பான்; நல்லாரைக் காலன் நணுகி நில் லானே. (திருமந்திரம்) அரசன் கல்லான் ஆயின் உலகிற்கு உளவாகும் அல்லல்களே இதல்ை ஒர்ந்து உணர்ந்து கொள்ளுகின் ருேம். எல்லாரையும் நன்கு பாதுகாக்க உரிய நிருபன் சிறந்த கல்விமானப் உயர்ந்து விளங்கிய போதுதான் அவனது ஆட்சிமுறை எவ்வழியும் செவ்வையாய் மாட்சி மிகுந்து வரும். அவ் வரவும் உறவும் தெரிய இறை மாட்சியின் பின் கல்வி காட்சியாய்க் கலந்து நின்றது. மன்னனுடைய நீதிமுறைகள் எல்லாம் கல்வியறிவால் மன்னிவரும் என்பதை ஈண்டு முன்னதாக உன்னி உணர்ந்து உறுதியுண்மைகளைத் தேர்ந்து கொள்கிருேம் 391. கற்ற பெருவழுதி கற்றபடி யேநின்று கொற்றமுற்ருர் என்னே குமரேசா- முற்றவே கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. (1) == இ-ள். குமரேசா கற்றற்கு உரிய நூல்களே எல்லாம் வழுவறக் கற்று, உக்கிரப்பெருவழுதி ஏன் நெறியே