பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2072 திருக்குறட் குமரேச வெண்பா லிருந்து எங்கும் செங்கோல் செலுத்திய வெண்குடை வேந்தன். அருங்திறலாண்மையும் பெருந்தகைமையும் உடையவன். அரிய கலேகள் பலவும் பயின்ற பெரிய மேதை. அறிவும் திருவும் அதிசய வீரமும் நெறி நியமங் களும் நிறையப் பெற்றவன். கலே நலம் கனிந்த புலவர் கள் பால் பேரன்புடையவன். எத்தகைய வித்தக விவே கிகளும் வியந்து புகழ விழுமிய நிலைமையில் எவ்வழி யும் தலைமையாய் இவன் விளங்கி யிருந்தான். 'கலேயுனர் புலமையில் தலேமையோன் ஆகி விதிமுறை வழாது முதுநிலம் புரக்கும் பெருந்தகை உக்கிரப் பெருவழுதி என்னும் தன்னிகர் இல்லா மன்னவர் பெருமான் .’’ என இன்னவாறு உலகம் உவந்து புகழ்ந்து வர நீதிமுறையுடன் ஆட்சிபுரிந்து மாட்சி மிகுந்து வந்தான். உண்மை திண்மை வண்மை முதலிய உயர் குணங்கள் எல்லாம் இயல்பாகவே இக் கோமகனிடம் குடிகொண் டிருந்தன. புலவர்களோடு கலந்து கலேகளே ஆராய்ந்து மகிழ்வதையே தலைமையான வாழ்வாக இக் குலமகன் கருதி வந்தமையால் அறிஞர் யாவரும் இவனேப் புடை சூழ்ந்து போற்றி வந்தனர். தாய் மொழியான தமிழ் மொழியை வாய்மொழியளவில் பேசி வந்தவரும் சிறந்த மதிநலமுடையராய் யாண்டும் விளங்கி கின்றனர். புலவர்கள் குழுமிய சங்கத்தில் தலைமைப் புலவயைப் நிலவி யிருந்தமையால் இம் மன்னன் ஆட்சியில் கலே அறிவுகள் எவ்வழியும் செவ்வையாய்த் தழைத்து வந் தன. திருவள்ளுவப் பெருமான் சங்கத்தில் வந்து தமது நூலே அரங்கேற்றிய பொழுது அந்த அருமைத் திருக் குறளே வியந்து புகழ்ந்து இம் மதிமான் பாடிய கவி அதிசய மகிமையுடையது. அயலே வருவது கானுக. நான்மறையின் மெய்ப்பொருளே முப்பொருளா நான்முகத் | தோன் தான்மறைந்து வள்ளுவய்ைத் தந்துரைத்த-நூன்முறையை வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்நெஞ்சம் சிந்திக்க கேட்க செவி. (உக்கிரப்பெருவழுதியார்)