பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2540 திருக்குறட் குமரேச வெண்பா எண்ணியன எண்ணியாங் கெய்தித் திண்ணிய ராய்ப் பயன் பெறுவார் சிலரே; அவ்வண்ணம் எய்தா மல் ஏமாந்து இழிந்து கெடுபவர் பலர் ஆதலால் பன் மைப் பாலால் உரைத்தார். வலியறிந்து வினை செய்க: அறியாமல் யாதும் செய்யாதே. செய்தால் சிதைவு நேரும். இடைக்கண் என்றது கேடு அடையும் இடங்தெரிய நின்றது. முதலில் தெளிவா யறியாதவர் முடிவை கேரே அறியாமல் இடையில் அழிகின்ருர். அறிய வுரியதை ஆய்ந்து பாராமல், ஆர்வத்தால் தொழில் புரிய மூண்டு, அதைச் சரியாக முடிக்க மாட் டாமல் சரிந்துகின்று கைப்பொருளையிழந்து கடன்பட்டு மனமுடைந்து இடையே மடிபவரது பரிதாப கிலேயை இது பரிந்து குறித்துள்ளது. கடமையை உணர்ந்து கருமம் புரியாதவர் மடமை யாளராகின்ருர். உற்றவலிகளே உய்த்துணர்ந்து உறுதி தெரிந்து திடமாய் வினேசெய்ய நேர்வது அரசர் கடமை யாம். பொருள் செய்யும் கருமத்துடன் போர் புரியும் கருமமும் அவர்க்கு உரிமையாய் நின்றது. வெற்றி நேரே கிடைக்கும் என்று தெளிவாய்த் தெரிந்தாலொழிய அவர் ேபா ரி ல் இறங்கலாகாது. தம்மினும் மிக்க ஆற்றலுடையாரோடு மாறுபட்டுப் போராட நேர்ந்தால் அது பெரிய புலேயாட்டமாய்த் தோல்வியும் துயரங்களுமே காட்டிவிடும். ஆமாலோ என்று பெரியாரை முன்னின்று தாமாச் சிறியார் தறுகண்மை செய்தொழுகல் போமாறு அறியா புலன்மயங்கி ஊர்புக்குச் சாமா கண் காணுத வாறு. (பழமொழி 233) பெரிய வலியுடையாரோடு சிறிய வலியினர் உள்ளச் செருக்கால் ஊக்கிச் செருச் செய்ய நேரின் ஊருக்குள் வந்து அகப்பட்ட சிறுத்தைப்புலிபோல் தியங்கி மயங்கி அவர் சாவர் என முன்றுறையரையர் இங்ங்னம் குறித் திருக்கிருர். வலிய புலியும் கிலேமாறினால் நலிவாம். '