பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2570 திருக்குறட் குமரேச வெண்பா வரை= அளவு: எல்லை. வரையறுத்துத் துணிந்தது. வளவரை=செல்வ வளத்தின் எல்லை. உளவரை என்றது உற்றுள்ள நிலைமைகளே. துரக்காத= எண்ணி உணராத. துரக்கல்= கூர்ந்து நோக்கல். நேரே ஆராய்ந்து தேர்ந்து தெளிதல். எதையும் சீர்துக்கி நோக்கிச் செய்வதே சிறந்த வினேயாண்மையாம். பொருள்கிலே குடும்ப கிலே வாழ்க் கைநிலை வரவுகிலே செலவுகிலே பிற்காலநிலை முதலிய வற்றை நன்ருக எ ண் ணி .ே ய தானதருமங்களில் பொருளே அளவறிந்து ஆய்ந்து செலவிட வேண்டும். ஒப்புரவு ஆண்மை= உபகரிக்கும் திண்மை. ஆல் உருபு இதில் மறைந்து கின்றது. ஒப்புரவாளன் எனவும் பாடம். பிறர்க்கு உபகாரம் செய்வது சிறந்த மனிதத்தன்மை யாம். ஒப்புரவு செய்வதால் பொருள் சிறிது குறைய நேரும்: நேரினும் புண்ணியம் பெருகி வருதலால் அது கண்ணியமாய்ச் செய்ய வுரியதாம். உடலுக்கு உறுதியாயுள்ள பொருளேச் சிறிதுகொடுத்து உயிர்க்கு உறுதியான புண்ணியத்தைக் கொள்வது பேரூதியமே. தருமம் இருமையும் இன்பமாம். ஒப்புரவி ல்ைவரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோட் டக்க துடைத்து. (குறள் 220) ஒப்புரவு செய்வதால் பொருட் கேடு வருமாயினும் அது கேடு ஆகாது: ஆக்கமே யாம்; தன்னை விற்ருவது அதைச் செய்துகொள்ள வேண்டும் என்று முன்னம் இன்னவாறு குறித்த தேவர் இங்கே இப்படி உரைத் திருக்கிருர். அதற்கு இது நேரே மாறுபாடாய்த் தோன் றுகிறது. தோன்றினும் ஊன்றி நோக்கி உண்மையை ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். அது. அறத்துப்பால். இது பொருட்பால். அது எல்லார்க்கும் பொது: இது அரச னு க்கு ச் சிறப்பு. ஆட்சி முறைக்கு வளமான மாட்சி.