பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2594 திருக்குறட் குமரேச வெண்பா ஞால மன்னற்கு நல்லவர் நோக்கிய காலம் அல்லது கண்ணும் உண் டாகுமோ? (இராமா; 2: 2 : 19) ஞாலத்தை ஆளுகின்ற அரசன் காலத்தைக் கண்ணு கக் கருதி ஒழுக வேண்டும் என்று வசிட்டமுனிவர் இராமபிரானுக்கு இவ்வாறு இனிது போதித்திருக்கிருச். அரசன் எவ்வளவு ஆற்றல்களே யுடையயிைனும் வினே செய்தற்கு உரிய காலம் இடம் கருவி முதலிய வைகளேத் துருவித் துணைக்கொள்ள வேண்டும். அவ் வாறு கொண்டால் வினே இனிது முடியும். வியனை பயனும் நயனுய் விளைந்து வரும்; கொள்ளா தொழியின் கருமம் சிதைந்து போம்: கவலே அடைய கேரும். பண்டு முளேப்பது அரிசியே ஆலுைம் விண்டும் போனுல் முளே யாதாம்-கொண்டபேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகா தளவின்றி ஏற்ற கருமம் செயல். (மூதுரை 11) எடுத்துக்கொண்ட காரியம் இனிது முடிய வேண்டு மானுல் அதற்கு உரிய துனேவலி வேண்டும். பருவ காலமும் மருவி வர வேண்டும்; இல்லேயால்ை அல்ல லாம் என ஒளவையார் இவ்வாறு அருளி யிருக்கிரு.ர். குறித்துள்ள உவமை நுனித்து நோக்க வுரியது. = அரிசிதான் வித்தாயிருந்து விளேவுகளே உளவாக்கு கிறது. ஆயினும் உமி இல்லையாயின் அது முளேயாது. அரிசிபோன்ற சாரமான ஆற்றலையுடையராயினும் உமி அனேய சிறிய துனேவலி இலதேல் அவர் வினேசெய்ய இயலாது; அவருடைய வன்மை பயனற்றதாம். பார் வைக்குப் பகட்டாய் உண்டுகளித்திருக்கலாமே அன்றி ஊக்கி ஒன்றும் ஆற்ற முடியாது என அவரது அவை நிலைமையை இதில் உய்த்து உணர்ந்து கொள்கிருேம். உரிய கருவிகளே வினேகளே இனிது முடிக்கின்றன: அவற்றைத் தழுவிக் கொண்டவர் காரிய சித்தியுடன் சீரிய பலகீன அடைகின்றனர். கருமங்கள் முடிந்துவரும் மருமங்களேக் கருதி யுணர்வது உறுதி புரிவதாம்.