பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. கா ல ம் அ றி த ல் 26 19 காலம் கழிய விடாதே என்கிறது. கருமம் கருதி அடங்கியிருக்கும்பொழுது கொக்கைப் போல் குறிப்புடன் கூர்ந்து கிற்க: சமையம் வாய்த்த பொழுது அதன் குத்தைப்போல் கொத்திக் கொள்க. வேந்தர் வினே ஆற்றும் திறத்துள் விவேக வேகங் கள் வித்தக வினே தங்களாய் விளங்கியுள்ளன. கூம்பல்= குவிதல்; ஒடுங்குதல்: அடங்குதல். தொழில் செய்யாமல் ஒடுங்கி யிருக்கும்பொழுது சோம்பலும் மடமையும் தோயாமல் காரியமே கருதிக் கருமமே கண்ணுய்க் கூரியநோக்குடன் மனிதன் இருக்க வேண்டும்; அங்த இருப்புக்குக் கொக்கு ஈண்டு உவமை யாய் வந்தது. ஒக்க என்றது. அதனே ஒத்து நிற்கும் கூர்மையான நீர்மையை. பறவை இனங்களில் கொக்கு ஒருவகையான அறி வுடையது. மீன்களே இரையாக உண்பது. ஏரி முதலிய நீர் நிலைகளில் மீனே ப் பிடிப்பதற்காக யாதும் அசையா மல் அமைதியாய் நிற்கும். மீனைக் காண நேர்ந்தால் தப்பாமல் விரைந்து கொத்திக் கொள்ளும். அடக்கமாயிருந்து காரியத்தைச் சாதித்துக் கொள் வது கரும வீரத்தின் மருமமாம். நீண்ட நேரமானலும் கிலே திரியாமல் சலியாமல் நிலைத்து நின்று இரையைக் கவர்ந்து கொள்ளும் கொக்கைப் போலக் காரிய வீரரும் கருதிய பலனே உறுதியாய்க் கைக்கொள்ளுகின்றனர். அடக்கம் உடையார் அறிவிலரென் றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா-மடைத்தலேயில் ஒடுமீன் ஒட வுறுமீன் வருமளவும் வாடி யிருக்குமாம் கொக்கு. (மூதுரை 16) உரிய மீனே எதிர்நோக்கிக் கொக்கு இருப்பதுபோல் பெரிய பலனே நேர் நோக்கி அறிவுடையார் அடங்கி யிருப்பர் என ஒளவையார் இவ்வாறு கூறியுள்ளார். கொக்கு ஒக்க என்ற கு றி ப் பு மொழிக்கு ஒரு விருத்தியுரைபோல் இது விரிந்து வந்துள்ளது. அரிய