பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்பதாவது அதிகாரம் இ ட ன் அ றி த ல். அ.தாவது ஏற்ற இடத்தை அறிந்து ஆற்றலுற ஆற்றுதல். காலம் அறிந்து வினேசெய்ய வேண்டும் என்பதை முன்பு தெரிந்தோம்; இடம் அறிந்து தொழில் செய்ய வேண்டும் என்பதை ஈண்டு உணர்ந்து கொள் கிருேம். வலியும் காலமும் நன்கு பயனுறுதல் இடத்தி ேைலயாம்: ஆகவே இதன் வன்மையும் தன்மையும் நன்மையும் தெரிய அவற்றின் பின் இது வைக்கப்பட் டது. வைப்புமுறையில் மருவியுள்ள திட்பங்களே நுட்ப மாய் ஒர்ந்து உய்த்து உணர்ந்து கொள்ள வேண்டும். 491. அன்று தொடங்கா தடங்கிநின்ருன் காரிபின்பு குன்ருதேன் வென்ருன் குமரேசா-என்றும் தொடங்கற்க எவ்வினையும் எள்ள ற்க முற்றும் இடங்கண்ட பின்னல் லது. (க) இ-ள். குமரேசா! முன்பு தொடங்காமல் நின்ற காரி உரிய இடங்கண்டபின் ஏன் ஊ க் கி எழுந்தான்? எனின், முற்றும் இடம் கண்டபின் அல்லது எ ல் வி னே யு ம் தொடங்கற்க, எள்ள ற்க என்க. வினை புரியும் விவேகத்தை இது விளக்கியுளது. - காரிய சித்திக்கு உரிய இடத்தை முழுவதும் நன்கு தெரிந்துகொள்ளும் வரை எந்த வினையையும் தொடங் காதே; எவரையும் யாதும் இகழாதே. மாட்சியான இடத்தின் ஆட்சியைக் காட்சியாக் கண்ட பின்பே கருதிய வினையைப் புரிய வேண்டும். உடல்வலி படைவலி துணேவலி முதலியன உயர் கி.அலகளில் அமைந்திருந்தாலும் இடவலி திடமாய் எய் தும் அளவும் அடங்கியிருக்க வேண்டும்; அடங்கியிராமல் தொடங்கினல் யாவும் அவமாய் அவலமுற கேரும்.