பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2684 திருக்குறட் குமரேச வெண்பா பிரமாவின் கண்ணும் ஒரு வெண்மையைக்கண்டு ஏன் உண்மையை உணர்த்தி உறுதி நலன் அருளினுய் ? எனின், அரிய கற்று ஆசு அற்ருர் கண்ணும் தெரியும் கால் வெளிறு இன்மை அரிதே என்க, அறியாமை கிலேயை இது அறிவிக்கின்றது. அரிய நூல்களேப் பயின்று தெளிந்து குற்றம் அற்ற மேதைகளிடத்தும் ஆ ரா ப் ங் து நோக்கின் அறியாமை உள்ளே மருவி யிருக்கும். மனித அறிவின் மருமம் இனிது தெரிய வந்தது. அ றி வு இயற்கையாகவே மனிதனுக்கு இனிது அமைந்திருக்கிறது. விலங்கு பறவைகளே விட மனிதன் உயர்ந்தவய்ைச் சிறந்திருப்பது பகுத்தறிவாலேயாம். ஆயினும் அந்த அறிவு கல்விப் பயிற்சியால் உயர்ச்சி யடைந்து ஒளிபெற்று வருகிறது. கல்லாத அறிவு செல்லாத காசுபோல் தியங்கி நிற்கும்; கற்ற அறிவு எங்கும் வெற்றி பெற்று விளங்கி வரும். ஆகவே கல்விக்கும் அறிவுக்கும் உள்ள உற வுரிமைகள் ஈண்டு உய்த்து உணர வந்தன அரிய என்றது எளிதே கற்க முடியாத அரிய பெரிய கலேகளே. பல வகைகளின் நிலை தெரிய வந்தன. இலக்கியம் இலக்கணம் தருக்கம் கணிதம் காவியம் இதிகாசங்கள் புராணங்கள் அரசியல் உளவியல் உயிர் இயல் உணர்வியல் பூகோளம் ககோளம் முதலிய துறைகளோடு யோகம் ஞானம் என்னும் இத்தகைய தத்துவக் கலைகளும் பலவாறு விரிந்து பரந்துள்ளன. இவை யாவும் ஒருங்கே கற்று வல்லராகுதல் அரிய பெரிய செயலாம். இத்தகைய அரிய கலைகளேக் கற்றுப் பெரிய மேதையாய்த் தேர்ந்து தெளிந்து வந்தாலும் மனத்தில் மாசு அற்றிருத்தல் அரிதாம். ஆசு=புறக்குற்றம். மாசு= அகக்குற்றம். ஆசையாலும் அச்சத்தாலும் மனிதன் செய்கிற பிழைகள் ஆசு என நேர்ந்தன. பிறர் மனே விழைதல் முதலியனவே பெரிய கொடிய பிழைகளாம்.