பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32286 திருக்குறட் குமரேச வெண்பா காரியத்தை நடத்துக எனச் சீரிய ஒர் உறுதி நலனே அரசனுக்கு இவ்வாறு அறிவுறுத்தி யுள்ளார். ஈசன் ஒருவனன்றி இவ்வுலகில் யாருமே ஆசற் றிருத்தல் அரிதாகும்-ஆசின் குறைவை அறிந்து குணமும் தெரிந்து நிறைவை யுறுக நினேந்து. இதன் பொருளேக் கருதி யுணர்ந்து கருமம் புரிக. கூர்ந்து ஒர்ந்த போதன்றிப் பெரிய அறிவாளி களிடம் அ றி யா ைம மருவியிருப்பது சரியாகத் தெரியாது ஆதலால் தெரியுங்கால் என்ருர். உண்டே உளத்து வெளிறு என்று கூருமல் இன்மை அரிதே என்று குறித்திருப்பதில் உள் ள நயத்தைக் கருத்துரன் றிச் சிந்திக்க வேண்டும். எதிர்மறையும் ஏகாரமும் பரிதாப தொனியாய்ப் பரவியுள்ளன. மனித னுடைய குறை பாடுகளேக் கூர்ந்து ஒர்ந்து தேர்ந்து தெளிந்து சாந்தம் உற இது நேர்ந்துள்ளது. எவ்வளவு கல்வியறிவுகளே ஒருவன் எய்தியிருங் தாலும் மடமையும் மருளும் மயக்கமும் அவனிடம் மரும மாப் மருவி யிருக்கும். மனிதனது கிலேமை இவ்வாறு பரிவோடு உணர வந்துளது. ஒருவன் அறிவானும் எல்லாம்; யாதொன்றும் ஒருவன் அறியா தவனும்; ஒருவன் குணன் அடங்கக் குற்றமு ளானும்; ஒருவன் கனன் அடங்கக் கற்ருனும் இல். (நான்மணி 104) கல்வி குணம் குற்றம் அறிவு அறியாமைகளில் மனிதன் மருவியுள்ள நிலைமையை விளம்பி காகனர் இங்ங்னம் விளம்பி யிருக்கிருர். நான்கு குறிப்புகளையும் ஈங்கு நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அரிய கல்வியுடைய பெரிய மேதையிடமும் பேதை மை சிறிது சேர்ந்திருக்கும்; ஆயினும் அவரை உரிய து அணயாக அ ர ச ன் பேணிக்கொள்ள வேண்டும் என்பது ஈண்டு அதிகாரத்தால் அறிய வந்தது. i.