பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2740 திருக்குறட் குமரேச வெண்பா தாவுக்குத் துன்பங்களாம். துன்பம் கேராமல் சுகங்கள் நேர்ந்துவர ஒர்ந்து செய்வதே தேர்ந்த வினையாடலாம். அறிந்து=காரியங்களைச் செய்யும் முறைகளைக் கருதி உணர்ந்து. அறியும் அவனே வினைபுரிய உரியவன். ஆற்றி=கருமம் புரியுங்கால் நேரும் இடர்களைச் சகித்து. விஜனகளே ஆற்றிவரும் திறலுடையாரே வேந்த னுக்கு ஆக்கம் தரும் விறலுடையார். அவரையே வினே களில் ஆதரவோடு ஆண்டுவர வேண்டும். காரியத் திறங்களைக் கருதிச் செய்வது சீரிய ஆண்மையாம். கல்வி செல்வம் உறவு முதலிய வேறு வகைகளில் எவ்வளவு சிறந்தவராயிருந்தாலும் வினையாற்றும் திறம் இலராயின் அவரைக் காரியங்களில் விடுதலாகாது. அவரவர் பயிற்சியின்படியே எவ்வழியும் முயற்சிகள் உருவாகி வந்துள்ளன. குயவன் செய்வதை வயவன் செய்ய முடியாது: வயவன் செயலைக் குயவன் செய்யமாட்டான். தச்சன் செய்யும் வினையைத் தட்டான் செய்ய இயலாது; தட் டான் செய்வதைக் கொல்லன் செய்ய ஒல்லாது. செய்து பழகினவர்க்கே செய்வினைகள் கிழமைகளாகின்றன. உரிய தொழில்கள் அரிய பயிற்சிகளால் உயர்ச்சி யடைந்து உலகம் தெரிய வருகின்றன. தம்தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன வெந்தொழில ராய வெகுளிகட்குக் கூடுமோ ? மைந்திறை கொண்ட மலைமார்ப ! ஆகுமோ நந்துழுத வெல்லாம் கணக்கு. (பழமொழி 245) வினே ஆற்றும் தகைமையர் செய்வன மற்றையச் செய்யார்; அறியாதார் தொழில் செய்ய நேர்வது நத்தை உழுத உழவுபோல நகைக்கு இடமாம் என இது உணர்த்தியுளது. இந்த உவமைக் குறிப்பைக் கூர்ந்து ஒர்ந்து உரிமையைத் தேர்ந்து கொள்ள வேண்டும். வினைத்திறம் உடையாரையே வினேயில் அரசன் ஆண்டு வரவேண்டும் என்பது ஈண்டு உணர வந்தது.