பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்பத்து மூன்ருவது அதிகாரம் சு ற் ற ம் த ழ ல் அ.தாவது உற்ற உறவினரை அரசன் உரிமை யுடன் ஆதரித்தல். வினேயாளரைத் தேர்ந்து தழுவி அரச காரியங்களே இனிது நடத்த வேண்டும் என்று முன்னம் உரைத்தார். இதில் சுற்றத்தாசைத் தழுவி ஒழுக வேண்டும் என்று உணர்த்துகின்ருர். அது புறக் காட்சி: இது அகக்காட்சி: ஆ த லா ல் அதன் பின் அமைந்து நின்றது. தழால் = தழுவுதல்; அணேத்தல். 521 பற்றற்ற காலத்தும் பாண்டவர்பின் சோமகரேன் குற்றமறப் போனுர் குமரேசா-முற்றுமே பற்றற்ற கண்னும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே யுள. (க} இ-ள். குமரேசா செல்வம் நீங்கிய காலத்தும் பாண்டவச் பால் அன்பு பாராட்டி ஏன் சோமகர் பின்பு சென்ருர் : எனின், பற்று அற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள என்க. கிழமையாளரை இது கிளர்ந்து காட்டுகிறது. செல்வம் இ ல் லா த பொழுதும் உள்ளன்புடன் உரிமை கொண்டாடிவரும் இயல்புகள் உறவினர் இடமே இயல்பா யிசைந்து உள்ளன. பிறரிடம் இல்லை என்பதை ஏகாரம் உணர்த்தி நின்றது. பற்று என்றது இங்கே செல்வத்தை. மக்கள் மிக்க ஆர்வத்துடன் பற்றி வருவது ஆதலால் பற்று என்று பொருளுக்கு ஒரு பெயர் உறவாய்த் தோன்றியது. பரிந்து ஒம்பிப் பற்று அற்றேம் என்பர்; விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். (குறள் 88) ** இதில் பற்று என்னும் சொல் பொருளேக் குறித்து வந்திருத்தலேக் கூர்ந்து ஒர்ந்து கொள்கின்ருேம்.