பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. சு ற் ற ம் த ழ ல் 27.93 வாழ்ந்து வந்தான். உற்ற கிளேஞரை உரிமையுடன் தழுவி எவ்வழியும் இனிது உபசரித்து வந்தமையால் உறவினர் எல்லாரும் இவன் பால் பிரியமும் மதிப்பும் பெருகி கின்றனர். உள்ளதைப் பிறர்க்கு ஊட்டிய பின்பே இவன் உண்டு வருவது வழக்கமா யிருந்தது ஒளவையார் ஒருநாள் இவனிடம் வந்தார். அந்தக் கல் விச் செல்வியைக் கண்டதும் உள்ளம் உவந்து உபசரித் தான். நல்ல விருந்து செய்ய வேண்டும் என்று விரைக் தர்ன். எனக்காகப் பு தி தாய் யாதும் சமைக்க வேண்டாம்; பழையது தந்தாலும் போதும் ' என்று பாட்டி பரிந்து கூறிள்ை. இருந்த உணவை இவன் மகிழ்ந்து படைத்தான். கிழவி உண்டு உவந்தாள். அந்த உவகையோடு ஒரு கவியும் சுவையாய்க் கூறிள்ை. வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் முரமுரென வேபுளித்த மோரும்-திரமுடனே புள் வேளுர்ப் பூதன் புகழ்ந்துபரிந் திட்டபதம் எல்லா உலகும் பெறும். (ஒளவையார்) - உள்ளன்புடன் இவன் உபசரித்து இட்டமையால் இந்த உணவு எல்லா உலகும் பெறும் என்று அந்த அம்மை பாடியருளிள்ை. அருட் புலமையுடைய அவர் இவ்வாறு பாடிப்போக்வே பின்பு இவனுடைய விள புலங்கள் பெரு வளங்களை நல்கின. பெரியபாக்கிய வாய்ை இவன் விளங்கினன். கரவாமல் பிறர்க்கு ஊட்டி வருபவன் வசமான ஆக்கம் பெறுவான் என்பதை உலகம் இவன் பால் நோக்கி உணர்ந்து உவந்து வந்தது. 2. பக்தன். இவன் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்தவன். வணிகர் மரபினன். பெரிய உபகாரி. தன் உறவினர் வந்து தன் இல்லில் உண்டு மகிழ்வதைக் கண்டு மகி ழவே இவன் காதல் கொண்டான். தனக்கென வாழான் பிறர்க்குரியாளன் என்னும் பேரை யாரும் கூறிவர இவன் சீரோடு வாழ்ந்து வந்தான். ஒளவையாரை ஒரு முறை இவன் கண்டான். தொழுது துதித்தான். சிறந்த 350