பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. .ெ சங் கோ ன் ைம 2501. எண்பதத்தை யாகுமதி பெரும! (புறம், 40). ஆவூர் மூலங்கிழார் என்னும் சங்கப் புலவர் ஒரு மன்னனுக்கு இன்னவாறு அ றி வு கூறியிருக்கிரு.ர். எண்பதத்தன் ஆல்ை அந்த அரசபதவியில் எண்ணரிய பலன்கள் இனிது பதிந்து வருகின்றன. ஒரா= ஒர்ந்து ஆராய்ந்து. எண்பதம், ஒர்தல், முறை செய்தல், ஆகிய இவை செங்கோல் ஆட்சியின் சீர்மைகள் ஆதலால் அந்த மாட்சிகள் ஈண்டு முறையே தெரிய வந்தன. தண்பதம் = தாழ்ந்த தரம்; இழிந்த கிலே. எண்பதம் இன்றி அருஞ் செவ்வி இன்னமுகத்தணு யிருக்கும் அரசன் தானகவே இழிந்து அழிந்துபோவான் என் பார் தானே கெடும் என்ருர். கெட்டவனே யாரும் கெடுக்க வேண்டியதில்லை; அக்கேடே அவனைக் கடுமை யாய்க் கெடுத்து விடும். கேடு நேராமல் யாண்டும் சீரும் சிறப்பும் நிறைந்து அரசன் சிறந்து வர வேண்டுமால்ை காட்டு மக்களுக்கு நல்ல காட்சி நல்கி யாவும் காடி ஆராய்ந்து எவ்வழியும் நெறிமுறையே உதவி புரிந்து வர வேண்டும். ஒற்றின் தெரியாச் சிறைப்புறத்து ஒர்துமெனப் பொற்ருேள் துனே யாத் தெரிதந்தும்-குற்றம் அறிவரிதென் றஞ்சுவதே செங்கோன்மை; சென்று முறையிடினும் கேளாமை யன்று. (நீதிநெறி 32} செங்கோன்மையின் பான்மையை இது விளக்கியுளது. கூர்ந்து ஒர்ந்து மாந்தருக்கு முறைசெய்வதே வேங்தன் கடமையாம். பிறரிடம் குற்றம் குறைகள் நேராமல் காக்க வுரியவன் ஆதலால் தன்னிடம் அவை யாதும் இல்லாமல் நெறியே இருப்பவனே நீதி மன்னனுகிருன். கைப்புரை ஏற்றுப் பொய்ப்புகழ் ஏலாக் காதின ன்; அருள்பொழி கண்ணன்; தப்புரை வழங்கா நாவினன்; புவியோர் தாசன்தான் என வுணர் மனத்தன்;