பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 24 திருக்குறட் குமரேச வெண்பா நீ க ன். இவன் சந்திரகுல வேந்தன் ஆகிய சுகுணனுடைய புதல்வன். பல நூல்களிலும் நல்ல பயிற்சி யுடையவன்.' எல்லா வுயிர்களிடத்தும் இரக்கம் உள்ளவன். நெறி முறையே இவன் அரசு புரிந்து வந்தான். வருங்கால் சோமநாதன் என்னும் மறையவன் தீர்த்த யாத்திரை செய்ய விரும்பின்ை. இந்த அரசன் பால் அந்த வேதி: யன் பேரன்புடையவன் ஆதலால் தனது மனேவியையும் மூன்று வயது மகனேயும் இவனிடம் அடைக்கலமாக வைத்து விட்டுக் காசியம்பதியை நோக்கி அவன் போயி ன்ை. தாயையும் சேயையும் இவன் நன்கு பாதுகாத். தருளின்ை. தனியான ஒரு பெரிய விட்டில் அவர் இனிது வாழ்ந்து வந்தார். மூன்று மாதங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களே எல்லாம் உரிமையுடன் உதவி அவர் யாதும் வெளியே வராதபடி பாதுகாப்புச் செய்து அன்போடு ஆதரித்து வந்தான். பின்பு தனது காரிய மிகுதியால் அவரை இவன் மறந்து போன்ை. போகவே காலம் கடந்தமையால் அவர் இறந்து போர்ை. பதி பெயர்ந்து போன அவ் வேதியன் வந்தான், அதன் பின்பே இவன் நினேங்து விரைந்து அங்கே போய்ப் பார்த்தான்; அவர் மடிந்து கிடந்தார்; அந்த அவல நிலை யைக்கண்டு மறையவன் அழுதான்; இவன் பரிந்து பதைத்தான். பழியும் பாவமும் படிந்தனவே! என்று அழுது துடித்தான்: அ ர ைச வெறுத்தான்; யாவும் துறந்துபோய் அருங்தவம் புரிந்தான். நல்ல நீதிமான்: பெரிய கீர்த்திமான்; பொல்லாத ஒரு மறதியால் எல் லாம் இழந்து அல்லலுழந்தான். ஆதிபகவனே கினேந்து திது தீர கோற்ருன். பொச்சாப்பு புகழைக் கொல்லும். என்னும் பொய்யா மொழியை வையம் இவன் பால் மெய்யாய்த் தெளிந்து வியந்தது. வேங்கடமான்மியம் இவனுடைய வரலாற்றை நிரலே விளக்கி யுள்ளது. மறையவன் சோம நாதன் மனைவியை மகவை மாண்பார் இறையவன் பாது காப்பில் இருத்தினன் அயலே போனுன்;.